நெல்லை பாளையங்கோட்டையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க உடந்தையாக இருந்த தாய், கள்ளக்காதலன் கைது.
நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீனா வயது 42. இவர் தனது 14 வயது மகளுடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். மீனாவுக்கு நெல்லை திம்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது 24. என்ற டிரைவர் வேலை பார்ப்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறி இருக்கிறது.
அடிக்கடி மீனாவும் மணிகண்டனும் தங்களது வீட்டிலேயே 14 வயது மகள் கண்முன்னே தனிமையில் இருக்கும் நிலையும் இருந்திருக்கிறது. இந்த நிலையில் மணிகண்டன் மீனாவின் 14 வயது மகளை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி தொந்தரவு செய்து இருக்கிறார்.
இதையும் படிங்க: 10 வயது சிறுமி மரணத்தில் நடுங்கவிடும் திருப்பம்... சிக்கிய காமக்கொடூரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்... நடந்தது என்ன?
மேலும் தாய் கண் முன்னே 14 வயது சிறுமியை மணிகண்டன் பாலியல் தொந்தரவு செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார். இது குறித்து சிறுமி நெல்லை பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் மகளிர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு நடந்தது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். சிறுமி காவல்துறையினரிடம் அனைத்தையும் தெரிவிக்க காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாயான மீனா மற்றும் அவரது கள்ளக்காதலனான மணிகண்டன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நெல்லை பாளையங்கோட்டையில் கள்ளக்காதலன் தாய் கண் முன்னே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை முயற்சி செய்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: திருமணம் செய்வதாக கூறி 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்... மகிளா நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!