திருவள்ளூரில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் அளித்த சித்த மருத்துவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை செல்லும் தடம் எண் 538A மாநகர பேருந்தில் பயணித்த பெண்ணிடம் அருகில் இருந்த நபர் அத்து மீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது,
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கூச்சலிட்டதை அடுத்து பேருந்தில் ஓட்டுநர் உடனடியாக இரண்டு கதவுகளையும் மூடியதுடன் திருவள்ளூர் நகர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்
இதையும் படிங்க: கோயிலா..? சுடுகாடா?.. தோண்ட, தோண்ட வரும் பெண்களின் உடல்கள் - தர்மஸ்தலா மர்ம பிண்ணனி..!
மேலும் போலீசார் விசாரணையில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் ஸ்ரீபெரும்புதுரை சார்ந்த மதி என்பதும் அவர் அரக்கோணத்தில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரால் திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்ல வேண்டிய பேருந்து திருவள்ளூர் ஸ்டேட் பேங்க் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு காலதாமதமாக சென்றது இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே பயங்கரம்... சுற்றுலா வேன் மீது வேகமாக மோதிய லாரி... 2 பேர் பலி...!