சேலம் மாவட்டம் ஏற்காடு ஏற்காடு 48வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குறிப்பாக இந்த ஏழு நாட்கள் நடைபெறக்கூடிய இந்த கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் உட்பட்ட பல்வேறு விஷயங்கள் நடைபெற உள்ளது குறிப்பாக மலர் கண்காட்சியானது இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.

வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சுற்றலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் துவங்கிவைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் முழுவதுமே நடைபெற்றன.
இதையும் படிங்க: 2வது முறையாக நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார் ராகுல்காந்தி... காரணம் இதுதான்!!

தற்போது அதனை காண்வதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அண்ணா பூங்கா மலர்கள் கண்காட்சி நுழைவாயில் அருகே நின்று கொண்டிருந்தனர். அமைச்சர்கள் வருகையை முன்னிட்டு பிற்பகல் 2 மணி முதல் பூங்காவில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் ஊழியர்கள் வெளியேற்றி இருக்கிறார்கள். அமைச்சர்கள் முறைப்படி திறந்து வைத்த பிறகே பூங்காவில் அனுமதி என்று கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் 4 மணி ஆன நிலையில், பூங்காவின் கேட்டருகே நின்று கொண்டு ஊழியர்களுடன் சுற்றுலா பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் வருகைக்காக காத்திருந்த பயணிகள், நாங்கள் என்ன அமைச்சரை பார்க்கவா வந்தோம், மலர் கண்காட்சியை பார்க்கத் தானே வந்தோம். எங்களை உள்ளே செல்ல அனுமதியுங்கள் என ஊழியர்களுடன் சண்டையிட்ட னர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: லைசன்ஸ் ரத்து.. ஆட்டோ பறிமுதல்.. அடுத்தடுத்து செக் வைத்தது மதுரை கோர்ட்..!