• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பல்கலை. வேந்தர் ஆளுநர்.. துணைவேந்தர்களை நியமிக்க முடியாதா.? பாலகுருசாமி காட்டம்!

    தமிழகத்தின் பல்கலைக்கழகங்களின் சுதந்திரம், நேர்மை ஆகியவை பெருமளவுக்கு சிதைந்துவிடும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Tue, 15 Apr 2025 22:08:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Former Anna university vice chancellor balagurusamy on SC verdict

    இது தொடர்பாக குருசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்," தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 10 பல்கலைக்கழக சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் இசைவு தெரிவிக்க வகை செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திய உயர்கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல். ஆனால், இந்தத் தீர்ப்பு தமிழகத்தில் பல்கலைக்கழக நிர்வாகம், உயர்கல்வியின் தரம் ஆகியவற்றில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.

    BalaGurusamy

    இத்தீர்ப்பின்படி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அரசே நியமிக்கலாம். அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தால், பதவி நீக்கமும் செய்யலாம். இதுவரை இந்த அதிகாரங்கள் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடமே இருந்தன. இப்போதும் ஆளுநரே வேந்தராக நீடிக்கிறார். ஆனால், பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநருக்குத் துணைவேந்தர் நியமனத்தில் எந்த உரிமையும் இல்லை என்கிற விநோதமான நிலை உருவாகியிருக்கிறது.

    BalaGurusamy

    பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை வேந்தராக இருக்கும் ஆளுநரே நியமிக்கும் நடைமுறை நாடு முழுவதும் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. இந்த நடைமுறை அரசியல் குறுக்கீடுகளால் நேரும் ஆபத்தைத் தடுப்பதற்காக அமைந்தது. இந்நிலையில், காலம் காலமாக ஆய்வு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட முறையை திடீரென்று மாற்ற வேண்டிய அவசரம் என்ன? இந்த மாற்றம் உயர்கல்வியில் சுனாமியைப் போல் தாக்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, பல்கலை நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஏற்படும்.

    இதையும் படிங்க: மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு.. உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு.. மத்திய அரசு அதிரடி முடிவு.?

    BalaGurusamy

    இது, மாநிலத்தின் உயர்கல்வியில் அனைத்து அம்சங்களையும் முழுமையாகச் சிதைத்துவிடும். இந்த விளைவுகளையெல்லாம் உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லையோ என நினைக்க வேண்டியிருக்கிறது. ஒரு வேளை, அரசு நிறைவேற்றிய சட்ட முன்வடிவுகளை ஆளுநர் நீண்ட காலமாகக் கிடப்பில் போட்டதை மட்டும் கவனத்தில் கொண்டிருக்கக் கூடும்.
    துணைவேந்தர்களை யார் நியமிக்கிறார்கள் என்பது உண்மையிலேயே முக்கியமானது அல்ல. ஒருவர் பெயர்பெற்றவராக, நேர்மையானவராக, அனுபவம் உள்ளவராக, தலைமைப் பண்புள்ளவராக, தகுதியானவராக இருந்தால், அவரைத் துணைவேந்தராக நியமிப்பது ஏற்புடையது. உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பின் நியமனத்தில் எந்த நடைமுறையைப் பின்பற்றினாலும், அரசியல் குறுக்கீடு இல்லாமல் இருக்க வேண்டும்.

    BalaGurusamy
    அதன் மூலம் ஊழல், உற்றார், உறவினருக்கு ஆதாயம் செய்தல், சலுகை காட்டுதல் ஆகியவை தடுக்கப்பட வேண்டும். துணைவேந்தர் நியமனங்களில் கடந்த காலங்களில் இருந்தது போல் ஊழல், உற்றார், உறவினருக்கு ஆதாயம் செய்தல், சலுகை காட்டுதல் ஆகியவை அமைந்துவிட்டால், தமிழகத்தின் பல்கலைக்கழகங்களின் சுதந்திரம், நேர்மை ஆகியவை பெருமளவுக்கு சிதைந்துவிடும். இது, ஏற்கெனவே, மோசமான நிலையில் இருக்கின்ற உயர்கல்வியின் தரத்தையும் ஆராய்ச்சியின் தரத்தையும் சீர்குலைக்கும்" என்று அறிக்கையில் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பாஜகவுக்கு எதிராக திமுக ஸ்டைலில் களமிறங்கிய விஜய்... இன்னும் மூன்றே நாளில் வரப்போகும் விசாரணை..!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share