2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பின்னர் பேசிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் இந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். அவரே டாஸ் நிகழ்விலும் பங்கேற்றார்.

டாஸ் வென்ற பிறகு பேசிய ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ், நாங்கள் முதலில் பந்துவீசி இருக்கிறோம். எங்கள் ஆட்டம் 50-50 யாகத் தான் இருக்கிறது. நாங்கள் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் விளையாட இருக்கிறோம். அது சேஸிங்கில் எங்களுக்கு உதவும். நாங்கள் மிகவும் வெறுப்படைந்து இருக்கிறோம். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் நாங்கள் நன்றாக விளையாடினோம். ஆனால் அதன் பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்தோம். நாங்கள் நிறைய டி20 கிரிக்கெட் ஆடியிருக்கிறோம். அந்த வகையில் இதை புரிந்து கொண்டு இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: சிறப்பான ஆட்டத்தால் RCB-ஐ சுருட்டிய SRH... 42 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!!

கடந்த போட்டியில்கூட நாங்கள் முதல் 17 ஓவர்களில் நன்றாக விளையாடினோம். அதன் பிறகு எங்கள் கவனத்தை சிதறவிட்டோம். இப்போது நாங்கள் ஐந்தாவது இடத்துக்காக விளையாடுகிறோம். இதற்கு முன் முதல் நான்கு இடங்களில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இருந்தோம் என்று தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், நிச்சயம் நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். ஆனால், எங்களின் ஆட்டத்தின் மீது நான் மனநிறைவு அடையவில்லை.

நாங்கள் இங்கிருந்து எங்கள் ஆட்டத்தை மேலே கொண்டு செல்ல வேண்டும். அணியில் ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாடுகிறார்கள். இப்போது நாங்கள் பாதி வேலையை முடித்து இருக்கிறோம். இப்போது என்ன நடக்கிறது என்பதை மட்டுமே நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜோஸ் இங்கிலீஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: படிக்கலுக்கு பதில் வேறொரு வீரர் அணியில் சேர்ப்பு... ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் முக்கிய தகவல்!!