2025 ஐபிஎல் சீசனின் இன்றைய போட்டியில் ஐதராபாத் அணியும் குஜராத் அணியும் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் குஜராத் அணி தரப்பில் சுப்மன் கில் - சாய் சுதர்சன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சாய் சுதர்சன் 48 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் சுப்மன் கில் - பட்லர் கூட்டணி இணைந்தது. சுப்மன் கில் 25 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். சுப்மன் கில் 76 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். மறுபுறம் பட்லர் அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஷாரூக் கான் களமிறக்கப்பட்டார். மறுபுறம் வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களிலும், திவாட்டியா 6 ரன்களிலும், ரஷித் கான் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதன் காரணமாக குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது. 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கரையே ஓரம் கட்டிய சாய் சுதர்சன்... டி20 கிரிக்கெட்டில் தரமான சம்பவம்!!

டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த இஷான்கிஷன் 17 பந்துகளில் 13 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் ஹென்ரிச் கிளாசன் களமிறக்கப்பட்டார். மறுபுறம் அபிஷேக் சர்மா சிறப்பாக ஆடி வந்தார். 41 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அதில் 6 சிக்ஸர்கள் 4 பவுண்ட்ரிகளும் அடங்கும். ஹென்ரிச் கிளாசன் 23 ரன்களிலும் அன்கிட் வர்மா 3 ரன்களிலும் கமிந்து மெண்டிஸ் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

பின்னர் பேட் கம்மிஸ் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி கூட்டணி களமிறங்கியது. இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் குவிக்க முயற்சித்தனர். ஆனால் பேட் கம்மிஸ் 19 ரன்களும் நிதிஷ்குமார் 21 ரன்களும் மட்டுமே குவித்தனர். இதன் மூலம் குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: RR-ஐ தொடரில் இருந்து வெளியேற்றிய MI... அபார வெற்றியால் முதலிடத்துக்கு முன்னேற்றம்!!