2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.

இந்த போட்டி தற்போது பிளே ஆஃப் செல்வதற்கான போட்டியாக மாறியுள்ளது. புள்ளிப்பட்டியலில் குஜராத், பெங்களூர், பஞ்சாப் மற்றும் மும்பை ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடத்தில் உள்ளன. இந்த நிலையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத உள்ளன. இதனிடையே மழையின் காரணமாக இந்த போட்டி தாமதமாகி உள்ளது.
இதையும் படிங்க: ஒரே ஓவரில் மாறிய ஆட்டம்... கேகேஆர் அணிக்கு பிளே ஆஃப் கனவை தகர்த்த சிஎஸ்கே!!

தரம்சாலாவில் இந்தப் போட்டி நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் டாஸ் போடுவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பாக மழை பெய்யத் துவங்கியது. மழை சற்று அதிகமாக இருந்ததால், மொத்த மைதானமும் உறைகளால் மூடப்பட்டது. இதனால் டாஸ் போடுவதும் தாமதமானது, போட்டியும் தாமதமாகி உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி 11 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் இருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முன்னேற்றத்தைச் சந்திக்க முடியும். மேலும் பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்க முடியும் என்பதால், இந்த இரண்டு அணிகளுக்கும் இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. மழையால் ஏற்பட்ட தாமதம் இரு அணி ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: மழையால் தொடர்ந்து தாமதமாகும் ஆட்டம்... மழை நீடித்தால் ஆட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு!!