2025 ஐபிஎல் சீசனில் இன்றைய ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து சிஎஸ்கே அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய கான்வே 10 ரன்களிலும், உர்வில் பட்டேல் டக் அவுட்டாகினர். இதை அடுத்து ஆயுஷ் மாத்ரே, அஸ்வின் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் அஸ்வின் 8 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க, சிறப்பாக விளையாடிய ஆயுஸ் மாத்ரே 20 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார்.

இதில் எட்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 5 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 1 ரன் மட்டுமே சேர்த்தார். பின்னர் வந்த டிவால்ட் பிரவீஸ் வழக்கம் போல் தன்னுடைய அதிரடியை காட்டினார். மூன்று சிக்ஸர், இரண்டு பவுண்டரி என அடித்து விளாசினார். பிரவீஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இதை அடுத்து களமிறங்கிய சிவம் துபே 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் தோனி 17 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார்.
இதையும் படிங்க: தொடர் முழுவதும் நாங்கள் அழுத்தத்தில் இருந்தோம்.. தோனி கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

இறுதியில் ஆன்சூல் காம்போஜ் 5 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சங் களமிறங்கினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய சூர்யவம்சி 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதில் 4 பவுண்ட்ரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். மறுமுனையில் சஞ்சு சாம்சங் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து ரியான் பராக் மற்றும் ஜூரேல் கூட்டணி இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரியான் பராக் 3 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் ஜூரேல் சிறப்பாக ஆடி 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். ஹெட்மயர் 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: LSG-ஐயும் தன்னோடு வெளியே கூட்டி சென்ற SRH... தொடரை கைவிட்டாலும் போட்டியில் வெற்றி!!