2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இது குறித்து பேசிய சஞ்சு சாம்சன், நாங்கள் முதலில் பந்து வீச போகிறோம். டெல்லிக்கு எதிரான கடைசி போட்டியில் இங்கு விளையாடும் போது ஆடுகளத்தில் ஏதோ இருக்கின்றது.

அதனை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம். எங்கள் அணியில் இருக்கும் அனைவரும் மேட்ச் வின்னர்கள் தான். ஒவ்வொருவரும் மேட்ச் வின்னர் போல் யோசிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது அறிவை பயன்படுத்திக் கொண்டு தைரியமாக விளையாட வேண்டும். எங்கள் அணியில் இன்று இரண்டு மாற்றங்கள் இருக்கிறது. யுத்வீர் சிங் இன்று விளையாடுகிறார் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: LSG-ஐயும் தன்னோடு வெளியே கூட்டி சென்ற SRH... தொடரை கைவிட்டாலும் போட்டியில் வெற்றி!!

அடுத்த ஆண்டுக்கான அணியை கட்டமைக்கும் பணியை தீவிரமாக செய்து வருகின்றோம். எங்கள் அணியின் பவுலிங், சில விஷயங்கள் செய்ய வேண்டும். நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த பிறகு அடுத்த ஆண்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கேள்விக்கு இப்போது விடை தேடி கொண்டிருக்கின்றோம். தற்போது காம்பினேஷனை சரி செய்து கொண்டு மினி ஏலத்தில் இரண்டு வீரர்களை வாங்க வேண்டும்.

இந்த தொடரின் ஆரம்பத்தில் நாங்கள் தடுமாறினோம். இந்த தொடர் முழுவதும் நாங்கள் அழுத்தத்தில் இருந்தோம். எங்களால் சரியாக செயல்பட முடியவில்லை. கிரிக்கெட்டில் அனைத்து ஷாட்டுகளையும் ஒரே போட்டியில் ஆட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சரியான ஷாட்களை தேர்ந்தெடுத்து விளையாடினால் போதும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இன்றைய ஆட்டத்தில் இவர் பங்கேற்கவில்லை... LSG vs SRH போட்டிக்குறித்து பேட் கம்மீஸ் முக்கிய தகவல்!!