2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் லக்னோ மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த டாஸுக்கு பின் பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பேட் கம்மீஸ், இந்த ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று எங்களுக்கு தெரியவில்லை. இதனால் சேசிங் செய்வதே நல்லது என்று நினைக்கின்றேன்.

நாங்கள் எங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தி இந்த சீசனில் விளையாடவில்லை. எனவே எங்கள் முழு திறனை கண்டிப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றோம். அதுமட்டுமில்லாமல் எங்கள் அணியில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. மற்றபடி நாங்கள் அனைவரும் நல்ல உத்வேகத்துடன் இருக்கின்றோம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை இந்த சீசன் விளையாடவில்லை.
இதையும் படிங்க: மழையால் ரத்தான ஆட்டம்; முதலிடத்துக்கு முன்னேறியது RCB... தொடரிலிருந்து வெளியேறியது KKR!!

எங்கள் அணியில் பல இளம் வீரர்கள் இருக்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் பங்கேற்கவில்லை. உனாட்கட் தனிப்பட்ட காரணத்திற்காக இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. அதற்கு பதிலாக ஹார்ஸ் டுபே மற்றும் டைடே ஆகியோர் களமிறங்குகிறார்கள் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட், நாங்கள் முதலில் பேட்டிங் செய்வது குறித்து கவலைப்படவில்லை.

எனினும் முதல் பேட்டில் செய்யும் போது அதிக அளவு ரன்கள் குவிக்ஜ வேண்டும். நாங்கள் ஒரு கட்டத்தில் ஒரு போட்டி என்ற நிலையில் இருக்கின்றோம். பெரிய அளவில் நெருக்கடியை எங்களுக்கு நாங்கள் சுமத்தி கொள்ள விரும்பவில்லை. இந்த ஓய்வு நேரத்தில் ஒரு அணியாக நாங்கள் மீண்டும் ஒருங்கிணைந்திருக்கின்றோம். மனதளவில் நல்ல நிலையில் இருக்கின்றோம். எங்கள் அணியில் ஒரு மாற்றம்தான் வில்லியம் ரூரிக்கு ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: RCB vs KKR போட்டி நடக்குமா? பெங்களூரில் வெளுத்து வாங்கும் மழை... தடுமாறும் பிசிசிஐ!!