• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இன்றும் ஆஜராகாத சீமான்... நாளை ஆஜராகவில்லையெனில்... நீதிமன்றம் எச்சரிக்கை!!

    சீமான் நாளை ஆஜராகவில்லை எனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என திருச்சி நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    Author By Raja Mon, 07 Apr 2025 20:58:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    the-trichy-court-has-warned-that-an-arrest-warrant-will

    திருச்சி எஸ்பியாக இருந்தவர் வருண்குமார். இவர் நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்தார். இதை அடுத்து சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழிவாங்குவதாகவும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் எஸ்பி வருண்குமார் அணுகி வருவதாகவும் சீமான் புகார் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன. இதை தொடர்ந்து வருண்குமார் ஐபிஎஸ் தரப்பு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக 15 விளக்கத்தை சீமான் அளித்திருந்தார்.

    arrest warrant

    ஆனால் தங்கள் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை எனக் கூறி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார். மேலும், புகார் தொடர்பாக கடந்த ஜனவரி 30ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதற்கிடையே வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் ஆகியோரை டிஐஜியாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது வருண்குமார் திருச்சி ஐஜியாகவும், வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜி ஆகவும் உள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 8ஆம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

    இதையும் படிங்க: அண்ணாமலை முன்பு பிரதமர் மோடியை சுட்டிகாட்டிய சீமான்.. என்ன சொன்னாரு தெரியுமா?

    arrest warrant

    இதனை குறித்துக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து இருந்தார். இந்நிலையில், டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த முறை சீமான் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின் போதும் சீமான் ஆஜராகவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் முதல் சீமான் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் வருண்குமார் தரப்பு சாட்சியங்களிடம் இன்று விசாரணை நடைபெற்றது. அதில் புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆஜராகி வருண்குமார் தரப்பில் சாட்சியம் அளித்தார்.

    arrest warrant

    தொடர்ந்து வழக்கின் புகார்தாரரான அருண்குமார் தரப்பில் விசாரணைகள் முடிவடைந்தது.  இதை அடுத்து சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்று ஆஜராகவில்லை. தொடர்ந்து வழக்கை விசாரித்த திருச்சி குற்றவியல் நீதிமன்றம், இன்று மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும் இல்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டது. ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இதை அடுத்து திருச்சி டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் நாளை காலை 10:30 மணிக்கு சீமான் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளதோடு ஏற்கெனவே இன்று மாலை ஆஜராகாத நிலையில், நாளையும் ஆஜராகவில்லை எனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: போர்க்களத்தில் நிற்கும் தளபதி… சீமானை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    அரசியல்
    எல்லா ஆண்களையும் தப்பு சொல்லாதீங்க..!! நடிகர் ரவி மோகன் ஆதரவாக பேசிய நடிகை மீரா சோப்ரா..!

    எல்லா ஆண்களையும் தப்பு சொல்லாதீங்க..!! நடிகர் ரவி மோகன் ஆதரவாக பேசிய நடிகை மீரா சோப்ரா..!

    சினிமா
    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    அரசியல்
    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    அரசியல்
    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    அரசியல்
    சூர்யா

    சூர்யா 'கருப்பு' படத்துல ஜெயித்திருக்கலாம்.. ஆனா இதுல தோத்துட்டாரு..!! இயக்குநர் மிஷ்கின் கறார் பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    அரசியல்
    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    அரசியல்
    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    அரசியல்
    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    அரசியல்
    சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!

    சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!

    அரசியல்
    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..! பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..! பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share