2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வந்தது. இதில் 57 போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் 58வது லீக் போட்டியில், பஞ்சாப் அணியும் டெல்லி அணியும் மோதின. முன்னதாக மழை காரணமாக ஆட்டம் தாமாதமானது. நீண்ட நேரத்திற்கு பின்பு மழை நின்று ஆட்டம் தொடங்கப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. பஞ்சாப் அணி 10.1 ஓவர்கள் பேட்டிங் செய்திருந்த நிலையில், திடீரென மைதானத்தில் இருந்த ஒளி விளக்குகள் அமர்ந்தன. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டதோடு, அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டதோடு பார்வையாளர்களும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஒரு வாரத்தில் ஐபிஎல் ஸ்டார்ட் பண்ணலனா; நாங்க வரமாட்டோம்.. சொந்த ஊர்களுக்கு திரும்பும் வீரர்கள்!!

இந்த பதற்றமான சூழல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தாக்குதல்களை நிறுத்தி வைக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் தொடர் அடுத்த வாரம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் பிசிசிஐ இது தொடர்பாக அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், அந்தப் போட்டி மீண்டும் முதலில் இருந்து நடத்தப்படும் என கூறப்படுகிறது. அந்தப் போட்டியுடன் சேர்த்து மொத்தம் 17 போட்டிகள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மீதமுள்ளன. அவற்றுக்கான அட்டவணையையும், எந்தெந்த மைதானங்களில் போட்டிகளை நடத்தலாம் என்பதையும் ஐபிஎல் நிர்வாகம் விரைவில் முடிவெடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மற்ற ஐபிஎல் அணிகள் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதன் பிறகு ஐபிஎல் தொடர் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: இந்தியா- பாக் பதற்றம்..! ஐபிஎல் 2025 போட்டிகளை மொத்தமாக நிறுத்திய பிசிசிஐ..!