கால்பந்தின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் லியோனெல் மெஸ்சி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் தனது அர்ஜென்டினா அணிக்காக மீண்டும் களமிறங்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். 38 வயதான இந்த அர்ஜென்டினா கேப்டன், உடல்நலம் சரியாக இருந்தால் மட்டுமே இதில் பங்கேற்பதாகவும், தனது அணிக்கு முக்கிய பங்காற்ற விரும்புவதாகவும் கூறினார். இந்த அறிவிப்பு, உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மெஸ்சி பேசுகையில், “உலகக் கோப்பை போட்டியில் ஆடுவது அற்புதமான ஒன்று. நான் அங்கு இருக்க விரும்புகிறேன். நான் நன்றாக உணர்ந்து, எனது தேசிய அணிக்கு உதவும் முக்கிய உறுப்பினராக இருக்க விரும்புகிறேன். அடுத்த ஆண்டு இன்டர் மயாமி அணியுடன் ப்ரீ-சீசன் தொடங்கும்போது, நான் 100 சதவீதம் உடல்நலத்துடன் இருக்கிறேனா என்பதை அன்றாட அடிப்படையில் மதிப்பீடு செய்வேன்” என்றார். இவரது இந்த பேச்சு, 2022 கத்தாரில் அர்ஜென்டினாவை உலக சாம்பியனாக்கிய அவரது வரலாற்று வெற்றியை நினைவூட்டுகின்றன.
இதையும் படிங்க: கால்பந்தின் முதல் பில்லியனர் வீரர்..! ஜாம்பவான் ரொனால்டோ வரலாற்று சாதனை..!!
மெஸ்சி, 2005 முதல் அர்ஜென்டினாவுக்காக 114 கோல்கள் அடித்துள்ளார். 2021 கோபா அமெரிக்கா மற்றும் 2022 உலகக் கோப்பை வெற்றிகளுக்குப் பிறகு, அவர் ஓய்வெடுக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது 2026 போட்டியில் – அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகியவை இணைந்து நடத்தும் இத்தகைய போட்டியில், அவர் ஆறாவது முறையாகப் பங்கேற்கலாம். அப்போது அவர் 39 வயதாக இருப்பார். “கடந்த உலகக் கோப்பையை வென்ற பிறகு, அதை பாதுகாக்க களமிறங்குவது அற்புதம். தேசிய அணியுடன் ஆடுவது என்றும் கனவு” என்று அவர் கூறினார்.
இந்த சீசனில் 29 கோல்கள் அடித்து எம்எல்எஸ் ஜோல்டன் பூட் விருது பெற்ற மெஸ்ஸி, அணியை பிளேஆஃப்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அர்ஜென்டினா அணி ஏற்கனவே 2026 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. பயிற்சியாளர் லியோனெல் ஸ்கலோனி, மெஸ்சியின் இல்லாத காலத்தில் இளம் வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ளார், ஆனால் அவரது தலைமை இன்றும் அணிக்கு உந்துதலாக உள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் ஆறு உலகக் கோப்பைகளில் ஆடும் முதல் வீரராக மெஸ்சி மாறலாம். உருகுவேயின் லுயிஸ் சுனாரஸ், “மெஸ்சி 2026-ல் ஆட விரும்புகிறார்” என்று ஏற்கனவே கூறியிருந்தார். இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் கால்பந்து வளர்ச்சிக்கும் உத்வேகம் அளிக்கும்.

மெஸ்சி, “அமெரிக்காவில் கால்பந்து வளர முடியும்” என்று நம்புகிறார். மெஸ்சியின் இந்த வார்த்தைகள், உலக கால்பந்தின் வரலாற்றை மாற்றும். அவரது உடல்நலம் சரியாக இருந்தால், 2026 ஜூன் 11 அன்று தொடங்கும் போட்டி, மீண்டும் அவரது மாயமான தொடுகளால் நினைவுகூரப்படும். ரசிகர்கள் இப்போது ஒரு கனவை எதிர்பார்க்கின்றனர்: ‘கோட்’ மெஸ்சியின் இறுதி உலகக் கோப்பை பயணம்..!!
இதையும் படிங்க: குகேஷின் சைலண்ட் 'REVENGE'.. நோஸ் கட் ஆகி நின்ற ஹிகாரு..!! என்ன நடந்தது..??