• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கால்பந்து

    FIFA World Cup: 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை... அர்ஜென்டினாவுக்கு மரண அடி கொடுத்த 'ஸ்பெயின்'..!!

    அதிக அளவில் ஃபவுல்கள் நடந்ததாகவும், ஸ்பெயின் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் அர்ஜென்டினா ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.
    Author By Amaravathi Mon, 20 Jul 2026 07:15:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Spain won FIFA world cup

    16 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றிய ஸ்பெயின் அணி, வீரர்களும் பயிற்சியாளரும் மைதானத்திலேயே தங்களது மகிழ்ச்சியையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி உற்சாகமாகக் கொண்டாடினர்.

    போட்டி தொடங்கியதிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களிலும், இரு அணிகளும் தலா 45 நிமிடங்கள் விளையாடியபோதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் போட்டி கூடுதல் நேரத்துக்கு சென்றது. அதன்படி, தலா 15 நிமிடங்கள் என மொத்தம் 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

    அந்த கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர் டாரிஸ் அடித்த கோல், அணியின் வெற்றியை உறுதி செய்தது.

    இதையும் படிங்க: கால்பந்து ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்! உலகக்கோப்பை பைனலுக்காக கேரளா முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை!

    அந்த கோலுக்குப் பிறகு அர்ஜென்டினா அணி பலமுறை கோல் அடிக்க முயன்றபோதும், ஸ்பெயின் அணியின் கோல்கீப்பர் அனைத்து முயற்சிகளையும் சிறப்பாகத் தடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    இந்தப் போட்டி தொடக்கம் முதல் இறுதி வரை மிகவும் பரபரப்பாக அமைந்தது. யார் முதல் கோல் அடிப்பார்கள், எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது.

    பொதுவாக அர்ஜென்டினா அணி, போட்டியின் கடைசி 10 நிமிடங்களில் கோல் அடித்து வெற்றியைத் தங்கள் பக்கம் திருப்பும் திறன் கொண்ட அணியாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த முறை, அந்த கடைசி நேரத்தில் ஸ்பெயின் அணி கோல் அடித்து வெற்றியைத் தன்வசப்படுத்தியது.

    ஜூன் 11 முதல் நடைபெற்ற இந்தத் தொடரில், அர்ஜென்டினா அணி ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடி, இறுதி நேரத்தில் கோல்கள் அடித்து வெற்றி பெற்ற பல போட்டிகள் இருந்தன. அதில் முக்கிய பங்காற்றியவர் லியோனல் மெஸ்சி. ஆனால் இந்த இறுதிப்போட்டியில் மெஸ்சிக்கும் அர்ஜென்டினா அணிக்கும் எதிர்பார்த்த அளவில் பந்துக் கட்டுப்பாடு கிடைக்கவில்லை.

    புள்ளிவிவரங்களின்படி, அர்ஜென்டினா அணி சுமார் 300-க்கும் மேற்பட்ட பாஸ்களை மட்டுமே செய்திருந்தது. அதேநேரம், ஸ்பெயின் அணி 700-க்கும் மேற்பட்ட பாஸ்களை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. போட்டி முழுவதும் ஸ்பெயின் அணி அதிக தாக்குதல் வாய்ப்புகளை உருவாக்கியது. அவற்றில் பலவற்றை அர்ஜென்டினா கோல்கீப்பர் தடுத்தபோதிலும், டாரிஸ் அடித்த அந்த ஒரு கோலே ஸ்பெயினுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தது.

    2010-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு, தொடர்ந்து நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர்களில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. அந்த நிலையில், சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

    அர்ஜென்டினா அணியைப் பொறுத்தவரை, இந்த முறை வெற்றி பெற்றிருந்தால் அது அந்த அணியின் நான்காவது உலகக் கோப்பை ஆகியிருக்கும். மேலும், தொடர்ந்து இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற முதல் அணியாகும் பெருமையையும் பெற்றிருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை ஸ்பெயின் அணி தடுத்தது.

    ஸ்பெயின் அணி தனது இரண்டாவது உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது 2026-ஆம் ஆண்டு மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    அர்ஜென்டினா அணி இதற்கு முன்பு 1978, 1986 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றுள்ளது. கடந்த உலகக் கோப்பையிலும் அர்ஜென்டினா சாம்பியனாக இருந்தது. இந்த முறை தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடைபெறவில்லை.

    ஸ்பெயின் அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது, 106-வது நிமிடத்தில் டாரிஸ் அடித்த அந்த ஒரே கோல்.

    போட்டி முடிந்தவுடன், ஸ்பெயின் வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்து டாரிஸ் மற்றும் சக வீரர்களை கட்டித் தழுவி, தங்களது மகிழ்ச்சியையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தினர்.

    16 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை மீண்டும் கைப்பற்றுவது எளிதான சாதனை அல்ல. உலகம் முழுவதும் கால்பந்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவிலும் கால்பந்துக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

    இந்தியா உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை என்றாலும், குறிப்பாக அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ்நாடு, கேரளா, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் மெஸ்சிக்கென தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. கொல்கத்தாவில் மெஸ்சிக்காக வெண்கலச் சிலை அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி இந்தியாவிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கேரளாவில் சில கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில், சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரை, திருவான்மியூர் மற்றும் கோட்டூர்புரம் கால்பந்து மைதானம் உள்ளிட்ட மூன்று இடங்களில் போட்டியை நேரலையாகக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    ஸ்பெயின் அணி வெற்றி பெற்றதை அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடியபோதும், மெஸ்சி அணிந்த 10-ஆம் எண் ஜெர்சியை அணிந்திருந்த ஏராளமான அர்ஜென்டினா ரசிகர்கள் சோகத்துடனும் கண்ணீருடனும் அங்கிருந்து வெளியேறினர்.

    இந்தப் போட்டியில் அதிக அளவில் ஃபவுல்கள் நடந்ததாகவும், ஸ்பெயின் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் அர்ஜென்டினா ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

    39 வயதை எட்டியுள்ள மெஸ்சிக்கு இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் என்றும், இந்தத் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்வார் என்று எதிர்பார்த்திருந்தோம் என்றும், ஆனால் அந்த கனவு நிறைவேறவில்லை என்றும் ரசிகர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    கடந்த உலகக் கோப்பையில் சாம்பியனான அர்ஜென்டினா, இந்த முறை தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பை ஸ்பெயின் அணி தட்டிச் சென்று, 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

    இதையும் படிங்க: மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பையா? யமாலின் புதிய வரலாறா? அர்ஜென்டினா Vs ஸ்பெயின்! வெல்லப்போவது யார்?

    மேலும் படிங்க
    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 14 நாள் ஜெயில்! தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 14 நாள் ஜெயில்! தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    பாமக பொதுக்குழு கூட்டம் ஜூலை 29-ல் கூடுகிறது: அன்புமணி இராமதாஸ், வடிவேல் இராவணன் கூட்டு அறிவிப்பு!

    பாமக பொதுக்குழு கூட்டம் ஜூலை 29-ல் கூடுகிறது: அன்புமணி இராமதாஸ், வடிவேல் இராவணன் கூட்டு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    GATE 2027 நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு! ஆகஸ்ட் 14 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

    GATE 2027 நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு! ஆகஸ்ட் 14 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

    இந்தியா
    டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!

    டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!

    இந்தியா
    துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுகிறார்கள்! மருத்துவமனை வாசலில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு!

    துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுகிறார்கள்! மருத்துவமனை வாசலில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    "50 நாளில் 9 ஆணவ கொலைகளா?" முதல்வர் விஜய்க்கு திராவிட தமிழர் கட்சி அதிரடி செக்!

    "50 நாளில் 9 ஆணவ கொலைகளா?" முதல்வர் விஜய்க்கு திராவிட தமிழர் கட்சி அதிரடி செக்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share