பாலிவுட் திரையுலகில் தனது நடிப்பு, கவர்ச்சி தோற்றம் மற்றும் தனித்துவமான ஸ்டைலால் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வரும் நடிகைகளில் ஒருவர் திஷா பதானி.

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்த அவர், திரைப்படங்களை மட்டுமின்றி விளம்பரங்கள், போட்டோ ஷூட்கள், சிறப்பு பாடல்கள் என பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: பாலிவுட்டின் பிரபல நடிகை கியாரா அத்வானி..!! கிளாமரில் பாரபட்சம் காட்டாத கிளிக்ஸ் இதோ..!

கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான ‘எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படம் திஷா பதானியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்தப் படத்தில் தோனியின் காதலி கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

2016-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், திஷா பதானிக்கும் இந்திய அளவில் மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.

அதற்கு முன்பு விளம்பரங்கள் மற்றும் சில திரைப்பட வாய்ப்புகள் மூலம் அறியப்பட்டிருந்த அவர், இந்தப் படத்திற்குப் பிறகு பாலிவுட்டில் அதிகம் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.
இதையும் படிங்க: நாளானாலும் ஆறாத ரணம்.. யாருக்குத்தான் துரோகம் நடக்கவில்லை?..!! தேசிய விருது சர்ச்சைக்கு மத்தியில் மனம் திறந்த டி. இமான்..!