தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள மிகப்பெரிய பிரமாண்டப் படைப்பு தான் ‘கூலி’. இப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இசை அமைத்துள்ளவர் அனிருத் ரவிச்சந்தர், மற்றும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “கூலி: தி பவர்ஹவுஸ்” தற்போது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று, இணையதளங்களில் மில்லியன்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளதுடன், படம் தொடர்பான ப்ரோமோஷன் பணிகள் நாடு முழுவதும் தீவிரமாக நடந்து வருகின்றன. இப்படி இருக்க 'கூலி' படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்க, இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் சேர்ந்து நடித்துள்ளனர். அவர்களில், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா என வித்தியாசமான நடிப்பிற்கும், பல்வேறு மொழிகளில் பங்களிப்புக்கும் பெயர் பெற்றவர்கள். இது ஒரு பான் இந்தியா நட்சத்திர படமாகவும், இந்திய திரையுலகின் பிரமாண்ட கூட்டணியாகவும் மாறியுள்ளது. இந்த சூழலில் 'ஜெயிலர்' படத்தில் ‘ஹுகும்’ என்ற பாடலால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அனிருத், இப்போது 'கூலி' படத்தில் அந்த வெற்றியை மீண்டும் மீட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், அனிருத் பேசுகையில், "‘கூலி தி பவர்ஹவுஸ்’ பாடலை ரஜினி சார் கேட்ட பிறகு, அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பினார். அதில், ‘அருமை… உன்னால் ஹுகும் பாடலை வெல்ல முடியாது என நினைத்தேன். ஆனால் மீண்டும் ஒருமுறை செய்துள்ளாய்’ எனக் கூறினார்" என அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் ஒருவரால் நேரடியாக பாராட்டப்படுவது, ஒரு இசையமைப்பாளருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் என்பதை சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த நிலையில், 'கூலி' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, நாளை மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
இதையும் படிங்க: ஹாலிவுட் தரத்தில் உருவான "ரெட் பிளவர்"..! நடிகர் விஜய்-கான கதையில் நடிக்க ரீ-என்ட்ரி கொடுத்த விக்னேஷ்..!
இதில் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், அனிருத், மற்றும் முக்கிய நடிகர்கள் என அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவின் நேரம் மற்றும் இடம் குறித்து படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளது. மேலும் படக்குழு தற்போது போஸ்டர்கள், ஸ்பெஷல் வீடியோக்கள், சிட்டி டூர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் மூலமாக தீவிரமாக ப்ரோமோஷன் செய்து வருகின்றது. 'கூலி' திரைப்படம் மல்டி-பிளெக்ஸ், ஸ்டாண்ட் அலோன், மற்றும் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. ‘கூலி’ திரைப்படம் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்தின் மீது அபாரமான எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘விக்ரம்’, ‘கைதி’, ‘லியோ’ போன்ற திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தையும் இயக்கி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில், 'கூலி' ஒரு வித்தியாசமான மாஸ் மற்றும் மெசேஜ் கலந்த அட்டகாசமான படமாக இருக்கவுள்ளது. இசையில் அனிருத், இயக்கத்தில் லோகேஷ், நடிப்பில் ரஜினிகாந்த் என இந்த மாபெரும் கூட்டணி ரசிகர்களுக்கு ஒரு விரும்பத்தக்க திரைப்பட அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதையும் படிங்க: விஷால் - துஷாரா விஜயன் இணையும் புதிய திரைப்படம்..! அதிரடியாக வெளியான அப்டேட்...!