இன்றைய டிஜிட்டல் யுகத்தில் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் பலருக்கும் ஒரு புதிய வாழ்வாதார வாய்ப்பாக மாறியுள்ளது. குறிப்பாக காமெடி அடிப்படையிலான நகைச்சுவை மற்றும் குடும்ப சம்பந்தப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு பெரும் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வருபவர்கள் நிறைய பேர் தற்போது தமிழ் சினிமா உலகிலும் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர்களில் ஒருவர் தான் பிரபல யுடியூபரான சதீஷ். யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ‘லூட்டி வீடியோஸ்’, ‘கணவன் - மனைவி இடையேயான பரிதாபங்கள்’, ‘அம்மா - மனைவி இடையேயான நகைச்சுவைச் சந்திப்புகள்’ போன்ற டிரெண்டிங் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்து இழுத்துவர் தான் சதீஷ், தற்போது இவர் சமூகவலைதள உலகை தாண்டி நேரடியாக சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். இதன் மூலம், இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகன் எனும் அந்தஸ்த்தை பெறுகிறார். இப்படி இருக்க, நடிகர் சதீஷ் நடிக்கும் முதல் திரைப்படத்தின் பெயர் "டாட்டூ (Tat2)". இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தை இயக்குநர் வேனு தேவராஜ் எழுதி இயக்கியுள்ளார். தயாரிப்பில் ரென்சு மற்றும் சஞ்சு இணைந்து பணியாற்றியுள்ளனர். முக்கியமாக, இந்த படம் இந்தியாவிலேயே முதன்முறையாக எடுக்கப்படும் ஏ.ஐ. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் என்பதால் தற்பொழுது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமாக பதிவு செய்துள்ள சதீஷ், இந்த நிகழ்வைத் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணமாகக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அந்த பதிவில்,

“ஒரு கனவு நினைவான நாளிது — என் முதல் திரைப்படமான "Tat2-இன்" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உங்களுடன் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஒரு சாதாரண நபராக இருந்து யூடியூபர், இன்ஸ்டா இன்ஃலூயன்சராக வளர்ந்து, இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன் என்பது என் கனவாக இருந்தது. இன்று அது நனவாகியுள்ளது. இந்த படத்தின் உருவாக்கத்தில் தொடக்கம் முதல் எனது பங்கு இருந்தது. கதையை நேசித்தேன், அதில் ஈடுபட்டேன், கடுமையாக உழைத்தேன். இந்த போஸ்டர் என் பயணத்தின் ஒரு பிரதிபலிப்பாகும்.
என்னை இத்தனை வருடங்கள் தொடர்ந்து ஆதரித்து வந்த நீங்கள் அனைவரும் இந்த படத்தையும் ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் அன்பில்லாமல் இன்று இவ்வளவு உயரம் என்னால் எட்டி இருக்க முடியாது. நன்றி...." மேலும், இயக்குநர் வேனு தேவராஜை குறிப்பிட்ட அவர், "இந்த வாய்ப்பை எனக்கு அளித்த வேனுவுக்கு என் மனமார்ந்த நன்றி. நண்பராகவும், இயக்குநராகவும் என்னை நம்பி இந்த படம் முழுவதிலும் என்னுடன் இணைந்து உழைத்தார். இது நம்ம இருவருக்கும் ஒரு கனவுபோன்ற அனுபவம். எதிர்காலத்தில் மேலும் இணைந்து பணியாற்றுவோம் என நம்புகிறேன். உங்களது எதிர்காலத்திற்காகவும் நான் வாழ்த்துகள்" என பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: பணத்துக்கு புது Definition கொடுத்த நடிகர் சசிகுமார்..! வாட்சப் ஸ்டேட்டஸை நிரப்பிய அவரது வாசகம்..!
இப்படி சாதாரண வாழ்க்கையில் இருந்து யூடியூபர் மற்றும் இன்ஃலூயன்சராக வளர்ந்த சதீஷ், இன்று வெள்ளி திரையில் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்த பயணம் ஏராளமான ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. 'டாட்டூ' படத்தின் கதை, அதன் உருவாக்கம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஐ மற்றும் இன்வெஸ்டிகேஷன் கலந்து ஒரு திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம், சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் எதையும் கனவு காணுங்கள், அதை அடைய உழையுங்கள் என அப்துல்கலாம் சொன்னதற்கு தற்பொழுது உயிர் சாட்சியாக மாறி இருக்கிறார் சதீஷ். அவர் நடிப்பில் உருவாகும் ‘டாட்டூ’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: வடிவேலு - பகத் பாசில் கூட்டணியில் 'மாரீசன்'..! பரபரப்பை ஏற்படுத்தும் கதைக்களமாக இருக்குமாம்..!