தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியான திரைப்படங்களில், ‘ஜென்ம நட்சத்திரம்’ என்ற படம் தனித்துவமான கதைக்களத்தால் ரசிகர்களிடையே அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது. திகில் மற்றும் அதற்குள் உள்ள உணர்வுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் "வெற்றி விழா" சென்னையில் விமர்சையாக நடைபெற்றது. இதில், படக்குழுவினர், நிரூபர்கள், ரசிகர்கள் என பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
அனைவரது கவனத்தையும் பெற்ற ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை ரத்தீஷ் மற்றும் சுபாஷிணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப்படத்தை மணிவர்மன் என்ற இயக்குநர் இயக்கியுள்ளார். மேலும் இப்-படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் தமன் அக்ஷன் மற்றும் மால்வி மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இருவரும் தங்களது கதாபாத்திரங்களை மிகச்சிறப்பாக நடித்து செயல்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தமன் அக்ஷனின் நடிப்பு, பயம் மற்றும் உணர்ச்சி இரண்டையும் சமநிலையுடன் வெளிப்படுத்தும் வகையாக இருந்ததாக ரசிகர்கள் பார்ட்டி இருந்தனர்.

இந்த வெற்றி விழாவில், பேசிய நடிகர் தமன் அக்ஷன், தனது திரைப்பட அனுபவம், சினிமா பயணம் மற்றும் ‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படத்தின் தனிப்பட்ட கருத்துக்களை குறித்து வெளிப்படையாக பகிர்ந்துகொண்டார். அதன்படி அவர் பேசுகையில், "நான் இதுவரை பல படங்களில் நடித்துள்ளேன். ஆனால் இந்த படத்துக்காக மட்டும் தான் ஒரு வெற்றிவிழா நடத்தப்பட்டிருக்கிறது.. இந்த படம் எனக்கு ஒரு விதமான மாற்றத்தைக் கொடுத்துள்ளது. நான் உண்மையில் மனதார அனுபவித்தேன்.
இதையும் படிங்க: ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்த ‘சரண்டர்’ பட ட்ரெய்லர்..! போலீஸ் காஸ்டியூமில் மாஸ் காட்டும் பிக்பாஸ் தர்ஷன்..!
நடிப்பிலும், வாழ்க்கையிலும் என்னை ஒரு புதிய கோணத்தில் பார்க்க வைத்த படம் என்றால் அது இது தான். இதற்கு முன் பல சந்தர்ப்பங்களில் நான் நடித்த பத்துக்கும் மேலான படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் ஒரு படம் முடிந்த பிறகு, ‘வெற்றி’ என்ற வார்த்தையை உணர்ந்து கொண்டாடும் அனுபவம் ‘ஜென்ம நட்சத்திரம்’ மூலமாக தான் எனக்கு கிடைத்துள்ளது. அதற்கு நன்றி சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.. அப்படி, இப்படி என என் பயணம் சென்ற போது, கடைசியில் எனக்கு கை கொடுத்தது ஒரு பேய்தான்..! ஆமாம், பேய் தான் என்னை காப்பாற்றியது. என்னை மட்டுமல்ல, எங்கள் படக்குழுவையே காப்பாற்றியது. அந்த பேய்க்கு நன்றி சொல்ல வேண்டிய அளவிற்கு தான் இந்த வெற்றி முக்கியமானது " என கூறினார். அவரது இந்த கருத்து, விழாவில் இருந்தவர்களை சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்தது. அதுமட்டுமல்லாமல் தமன் அக்ஷன் தனது பேச்சின் முடிவில், ஒரு புதிய செய்தியையும் வெளியிட்டார். அதன்படி "ஜென்ம நட்சத்திரம் படத்தின் வெற்றியால் உற்சாகம் பெற்ற எங்கள் படக்குழு, மீண்டும் ஒன்று சேர்ந்து புதிய படமொன்றை உருவாக்க இருக்கிறோம்.

அந்தப் படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை நானே எழுதியுள்ளேன். இது என்னுடைய சினிமா பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம். அந்தப் புதிய முயற்சிக்கான அப்டேட்கள் விரைவில் வெளியாகும்" என்ற அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘மிஸஸ் & மிஸ்டர்’ பட பாட்டு விவகாரம்..! நீக்கப்பட்ட இளையராஜா பெயர்.. சிக்கலில் சோனி மியூசிக் நிறுவனம்..!