தென்னிந்திய சினிமாவின் பான் இந்தியா ஸ்டார் நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் தன்னை நிரூபித்திருக்கும் திறமையான நடிகையாக பார்க்கப்படுகிறார். இதுமட்டுமல்லாமல், தேசிய விருதும் பெற்றுள்ள இவர், சமீபத்தில் நகைச்சுவை திரைப்படமான ‘உப்பு கப்புரம்பு’என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இந்த படம் நேரடியாக ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம், ஒரு நேர்த்தியான நகைச்சுவை படமாக பார்க்கப்படுவதுடன், கீர்த்தி சுரேஷின் அசால்டான நடிப்பும் அனைத்து மொழி பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக சுகாஸ் நடித்துள்ளார். இப்படத்தில் அழகான ஆன்டி ஹீரோ மாதிரியான கதாபாத்திரத்தில் கீர்த்தி நடித்து இருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், தனது மனநிலை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதன்படி அவர் பேசுகையில், "நான் அப்செட் ஆகிவிட்டேன் என்றால் நன்றாக சாப்பிடுவேன். சாப்பாடு எனக்கு பெரிய ஆறுதலாக இருக்கும். அதேபோல் காரை எடுத்துக் கொண்டு தனியாக ஓட்டிக் கொண்டு நன்றாக ஊரைச்சுற்ற ஆரம்பித்து விடுவேன். அதற்கென்று என் Spotify செயலியில் பாட்டு லிஸ்டே அதிகமாக இருக்கிறது. அப்போதெல்லாம் எனக்கு பிடித்த பழைய பாடல்களை அதிகமாக கேட்பேன். டிரைவ் பண்ணும்போது இயற்கை காட்சிகளும், பசுமையும் என்னுடைய மனதை சாந்தமாக்கும். மேலும், நான் வீட்டில் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறேன். அவன் என் குழந்தை மாதிரி. எதாவது பிரச்சனை, மன அழுத்தம், தவறான எண்ணம் என எதுவாக இருந்தாலும், அந்த நாய்க்குட்டியின் முகம் பார்த்த உடனே அது எல்லாம் மறைந்து விடுவதை போல உணர்வேன். அவனது காதல், அழகான ஒரு பார்வை போதும் என்னை சமாதானப்படுத்த " என அழகாக பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!
இப்படியாக கீர்த்தி சுரேஷின் கருத்தை கேட்ட, ரசிகர்கள் மற்றும் விலங்குகளை நேசிப்பவர்கள் அவரது கருத்தை பாராட்டி வருகின்றனர். பொதுவாக பிரபலங்கள் தங்களது பிரச்சனைகள், மனஅழுத்தங்கள் குறித்து பேசுவது சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் கீர்த்தி, தனது மனநிலையை திறந்த மனதோடு பகிர்ந்தது, ரசிகர்கள் மத்தியில் அவர் மீதான மரியாதையை மேலும் அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் படங்களில் நடித்து வரும் பெரிய பிரபலமாக இருந்தாலும், கீர்த்தி சுரேஷ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சாதாரண பெண்ணாக வாழவே விரும்புவதாகவே தெரிகிறது.

சமைப்பது, சாப்பிடுவது, விலங்குகளை நேசிப்பது, தனியாக டிரைவ் செல்வது, இசை கேட்பது போன்ற எளிமையான செயல்கள் மூலம் மனநிறைவைப் பெறும் ஒரு பிரபலமாக பார்க்கப்படுகிறார். நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த மனதை தொடும் நேர்காணல், அவரின் உண்மையான மனித தன்மையை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!