அனைவரது மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர் மறைந்த நடிகர் மயில்சாமி முதன் முதலில் சென்னைக்கு படவாய்ப்புக்காக வந்து தெருக்களில் தங்கி பின்பு தனது திறமையால் சினிமாவில் முன்னுக்கு வந்தவர். எப்பொழுதும் பார்க்க கலகலப்பாக இருந்த மயில்சாமி நடிகர் விவேக்கின் மரணத்தில் மனமுடைந்து போனார். சினிமாவில் இவர்கள் இருவரது தூள் பட காமெடியை யாராலும் மறக்க முடியாது. கடக ராசிக்கு கேன்சர் என சொல்லி திருப்பதி செல்வதாக கூறி விவேக்கிடம் பணங்களை வாங்கி ஏமாற்றி பின் சிக்கி கொள்வார். அந்த அளவிற்கு நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

இந்த சூழலில், மறைந்த மயில்சாமி மிகவும் இறக்க சுபாவம் உடையவர் என பல நடிகர்கள் கூற கேட்டிருப்போம். குறிப்பாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி மயில்சாமி குறித்து பேசுகையில், அவர் எப்பொழுதும் மஞ்சள் பை நிறைய பணம் வைத்திருப்பார் என்றும், யார் உதவி என கேட்டாலும் உடனே பணம் கொடுத்து உதவி செய்வார் எனவும் கூறினார். பின் திடீரென தனக்கு போன் செய்து பணம் அனுப்புங்க என சொல்லுவார். அனுப்பிய உடனே அனைவருக்கும் உதவி செய்வார். இதுதான் அவரது குணம் என தெரிவித்து இருந்தார். இப்படி இருக்கையில், கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி காலமானார்.
இதையும் படிங்க: ரசிகர்கள் செய்த செயலால் அதிர்ச்சியான AK..! அஜித்தின் நிலைமையை கண்டு நெட்டிசன்கள் குமுறல்..!

இந்த நிலையில், ராஜசேகர் இயக்கத்தில் மயில்சாமியின் மகன் அன்பு கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் "எமன்". இந்த படத்தின் நிகழ்ச்சியில், பேசிய அன்பு, "என் அப்பா பலருக்கு உதவி செய்து இருக்கிறார். தன்னிடம் வசதி, பணம் இல்லாவிட்டாலும் கூட கடன் வாங்கியாவது மற்றவர்களுக்கு உதவி செய்வார். அவர் இறந்த பின்பு நான் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு தேடியபோது, ஒருவர் கூட எனக்கு உதவ முன்வரவில்லை.
பல சினிமா இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எப்பையாவது அவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து பேசினால், அவர்கள் அப்படியா..! என்னை பார்க்க முயற்சி செய்தீர்களா. ஐய்யோ...எனக்கு தெரியாதே என்றார்கள். அவர்கள் தான் அப்படி என பார்த்தால் அப்பாவின் நண்பர்களையும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

சினிமாக்காரர்கள் சினிமாவில் பல காலமாக இருப்பவர்கள், இருந்தவர்களின் வாரிசுகளுக்கு உதவ வேண்டும். நான் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முயற்சி செய்கிறேன். இந்த படத்தில் அப்பா நடிக்கவில்லை. அவர் உயிருடன் இருக்கும் பொழுதும் என்னுடன் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்தார். இந்த "எமன் கட்டளை" என்ற படத்தில் நெல்லை சிவா எமனாக நடித்துள்ளார். அவர் சின்ன டயலாக் பேசி, தன் ஸ்டைலில் சிரித்தாலே போதும், செட்டே அதிரும். அவரும் காலமாகிவிட்டது எனக்கு வருத்தமான விஷயமாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: என் புருஷன கலாய்ச்சா நீங்க என்ன பெரிய ஆளா..! சந்தானத்தை வறுத்தெடுத்த நடிகை தேவயானி..!