சென்னையில் தங்கம் வாங்கத் திட்டமிட்டு இருந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் என மாறி வந்த தங்கம் விலை, இன்று (ஜூலை 13) திடீரென கணிசமாக குறைந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்திருப்பது நகை வாங்குபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்றைய விலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,200-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் தொடர்ந்து உயர்ந்திருந்த தங்கம் விலை மீண்டும் சரிவை சந்தித்திருப்பதால், திருமணம், விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் முதலீட்டிற்காக தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் இந்த விலை மாற்றத்தை ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
கடந்த வார விலை நிலவரத்தைப் பார்த்தால், ஜூலை 8-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,06,600-க்கு விற்பனையானது. ஜூலை 9-ஆம் தேதி ரூ.40 உயர்ந்து ரூ.1,06,560-ஆக இருந்தது. ஜூலை 10-ஆம் தேதி மேலும் உயர்ந்து ரூ.1,06,800-ஐ எட்டியது. அதன்பின்னர் ஜூலை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ரூ.1,06,400-ஆக குறைந்து நிலைத்திருந்தது. இன்று மீண்டும் ரூ.800 சரிந்ததன் மூலம் ஒரு சவரன் ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுவது வாங்குபவர்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காலையில் குறைந்த தங்கம் விலை! மதியமே எகிறியது! ஒரே நாளில் 2 முறை விலை மாற்றம்! மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றம், அமெரிக்க டாலரின் மதிப்பு, உலக பொருளாதார சூழல் மற்றும் மத்திய வங்கிகளின் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால், அடுத்த சில நாட்களிலும் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கங்கள் தொடரக்கூடும் என்று சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக வெள்ளி விலை இதே நிலையில் நீடித்து வருகிறது. தங்கம் விலை குறைந்தாலும், வெள்ளி விலை மாற்றமின்றி தொடர்வது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: காலையில் குறைந்த தங்கம் விலை! மதியமே எகிறியது! ஒரே நாளில் 2 முறை விலை மாற்றம்! மக்கள் ஷாக்!