சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரு எதிர்பாராத சுவாரசிய நிகழ்வாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.
திருச்சி செல்வதற்காகச் சென்னை விமான நிலையம் வந்த நயினார் நாகேந்திரன் மற்றும் அதே விமானத்தில் பயணிக்க வந்த துர்க்கா ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபோது, புன்னகையுடன் நலம் விசாரித்துக் கொண்டனர். அரசியல் களத்தில் திமுக - பாஜக இடையே கடுமையான விமர்சனப் போர்கள் நடந்து வரும் சூழலில், பொதுவெளியில் இரு தரப்பு ஆளுமைகளும் காட்டிய இந்த அரசியல் நாகரிகம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், ஓ.பி.எஸ் கூட்டணி குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார், தற்போது இருக்கும் கூட்டணியே மிகவும் பலமான கூட்டணியாகத்தான் இருக்கிறது. ஓ.பி.எஸ் மீண்டும் இணைவது குறித்துக் கேட்டபோது, அது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனித்து விடப்பட்ட OPS..! அவர் இல்லாமலேயே NDA பலமாக தான் இருக்கு... நயினார் பேட்டி..!
இதையும் படிங்க: தமிழ்நாட்டுப் பெண்கள் தாலி அறுக்க பாக்குறீங்களா ஸ்டாலின்? டாஸ்மாக் விவகாரத்தில் நயினார் தாக்கு..!