• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “மனசாட்சிப்படி உண்மையை பேசுங்க...” - பேரவையில் வார்த்தையை விட்ட ஆதவ் அர்ஜுனா... உடனே திருப்பிக் கொடுத்த திமுக, அதிமுக...!

    பொது ரக நெல்லுக்கு குறைவான விலையும் வழங்கப்படுகிறது என்ற விவாதத்தை நம்முடைய முன்னாள் உணவுத் துறை அமைச்சர் ஒரு பதிவாக வெளியிட்டிருந்தார்.
    Author By Amaravathi Thu, 20 Aug 2026 12:49:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aadhav arhuna vs dmk mla's

    பேரவையில் ரேஷன் அரிசியை ஆடு, மாட்டிற்கு தான் பயன்படுத்துவதாக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: சன்ன ரக நெல்லுக்கு அதிகமான ஊக்கத்தொகையும், பொது ரக நெல்லுக்கு குறைவான விலையும் வழங்கப்படுகிறது என்ற விவாதத்தை நம்முடைய முன்னாள் உணவுத் துறை அமைச்சர் ஒரு பதிவாக வெளியிட்டிருந்தார்.

    முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள் எட்டு பேரை அழைத்து, விவசாய சங்கங்களைச் சந்திக்கச் சொன்னார். நம்முடைய கம்யூனிஸ்ட் தோழர்கள் உள்ளிட்ட பலரும் அங்கு இருந்தனர். விவசாய சங்கங்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அப்போது ஒரு கோரிக்கையை முன்வைத்தோம்.

    இதையும் படிங்க: மக்களுக்கு தரமான ரேஷன் அரிசி வழங்குவதே இலக்கு.. இதில் CM விஜய் உறுதி - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!!

    உணவுத் துறையின் கீழ் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தொடர்பாக, நான் சிறுவயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே ரேஷன் கடைக்குச் சென்று அரிசி வாங்கிச் சாப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்போது சாப்பிடும்போதே அந்த அரிசியின் அளவு எப்போதும் பெரிதாக இருக்கும். அதன் நிறத்தையும் பார்த்தீர்கள் என்றால், நம்முடைய வீடுகளில் தற்போது நாம் சாப்பிடக்கூடிய அரிசியைப் போல இருக்காது.

    இங்கு இருக்கும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ரேஷன் அரிசி சாப்பிடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். இது தனிப்பட்ட விஷயம். ஆனால், இங்கு இருக்கக்கூடிய பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மனசாட்சிப்படி தெரிந்துகொள்ளலாம். யாரும் ரேஷன் கடையில் இருந்து அரிசி வாங்கிச் சாப்பிடுவது இல்லை என்பதுதான் உண்மை.

    நான் சொல்ல வருவது இதுதான். நாங்கள் உண்மையைப் பதிவு செய்கிறோம். இங்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் உண்மையாகப் பதிவு செய்ய வேண்டும். இதில் இந்த ஆட்சி, அந்த ஆட்சி, போன ஆட்சி, 50 ஆண்டுகால ஆட்சி என்று கடந்த காலத்தைப் பற்றிப் பதிவு செய்வதைவிட, இன்றைக்கு நிலைமை என்ன என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

    முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த விஷயம் சென்ற பிறகு, விவசாயிகள் கூறினார்கள். “நாங்கள் எங்களுடைய பயிரை மாற்ற வேண்டுமென்றால், நீங்கள் சன்ன ரக நெல்லுக்கு அதிகமான ஊக்கத்தொகை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

    அதன் பிறகு, முதலமைச்சர் அவர்களுடன் மீண்டும் ஒரு விவாதம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் அவர்கள், “மற்ற ஆட்சிகளை எல்லாம் விட்டுவிடுவோம். நம்முடைய ஆட்சியில் கொடுக்கக்கூடிய அரிசி சன்ன ரக நெல்லில் இருந்து பெறப்பட்ட அரிசியாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

    ரேஷன் கடைகளில் நாம் மக்களுக்கு வழங்கக்கூடிய அரிசியை, ரேஷன் கடைகளில் இருந்து வாங்கிச் செல்லும் அனைத்து மக்களும், குறிப்பாக தாய்மார்கள், தங்களுடைய வீடுகளில் சாப்பிடக்கூடிய அரிசியாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு அரிசி வழங்கும் இடத்தில், நாம் கொடுக்கக்கூடிய அரிசி அவர்களுடைய வீட்டில் சாப்பிடக்கூடிய அரிசியாக மாற்றப்பட வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் கூறினார்.

    இதற்காகத்தான் சன்ன ரக நல்ல அரிசிக்கு அதிகமான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் இனிவரும் காலங்களில் பொது ரக நெல்லுக்குப் பதிலாக சன்ன ரக நெல்லை பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

    அவர்கள் சன்ன ரக நெல்லை அதிகமாகப் பயிரிட்டால்தான், அதை முறையாகக் கொள்முதல் செய்து மக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்க முடியும். ஏனென்றால், விவசாயிகள் அதிக அளவில் பொது ரக நெல்லை மட்டுமே உற்பத்தி செய்துகொண்டிருந்தால், ரேஷன் கடைகளுக்கு சரியான தரமான அரிசியை வழங்க முடியாத நிலை ஏற்படும்.

    இதற்காகத்தான் சன்ன ரக நெல்லின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறோம். இதை உண்மையாகச் சொல்கிறோம். தாய்மார்களின் நிலையிலிருந்து சொல்கிறோம்.

    இன்றைக்கு அந்த நிலையை மாற்றக்கூடிய அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம். 90 சதவீதம் அளவிற்கு இன்றைக்கு அந்த அரிசியை வாங்கி யாரும் சாப்பிடுவதில்லை. இட்லி மாவு உள்ளிட்டவற்றுக்குத்தான் பயன்படுத்துகிறார்கள்.

     முன்னதாக நிறைய கடத்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவையெல்லாம் தடுக்கப்பட்டு, ஆந்திராவுக்குச் சென்று கொண்டிருந்ததும், கர்நாடகாவுக்குச் சென்று கொண்டிருந்ததும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் சன்ன ரக அரிசியை வாங்கி, அதற்கான நெல்லை முறையாகக் கொள்முதல் செய்து, அதைச் சரியான முறையில் சேமித்து வைக்க வேண்டும்.

    சேமிப்பு வசதி என்பது தற்போது போதுமான அளவில் இல்லை. இது இந்த அரசு, அந்த அரசு என்று சொல்ல வரவில்லை. அதிகமான உற்பத்தி வரும்போது தார்ப்பாயைக் கொண்டு மூடித்தான் நம்முடைய சேமிப்பை மேற்கொண்டு வருகிறோம். 30 முதல் 40 சதவீதம் அளவிற்குத்தான் தார்ப்பாயைக் கொண்டு மூடி சேமித்து வைத்திருக்கிறோம்.

    சேமிப்பு வசதிகளை உருவாக்குவதற்காக நம்முடைய உணவுத் துறை அமைச்சரும், விவசாயத் துறை அமைச்சரும் இணைந்து தனித்திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகின்றனர்.

    ஆனால், இன்றைக்கு 70 முதல் 80 சதவீதம் அளவிற்கு ஒவ்வொரு வீட்டிலும் தாய்மார்கள் அரசு வழங்கக்கூடிய அரிசியைச் சாப்பிடுவது உண்மை. இதுதான் உண்மையான சர்வே அறிக்கை. இந்த உண்மையை மாற்றுவதற்காகத்தான் சன்ன ரக நெல்லுக்கான அதிகமான ஊக்கத்தொகையை முதலமைச்சர்  அறிவித்திருக்கிறார் என்றார். 

    இதையும் படிங்க: அவையில் கலகலப்பு.. பாமக எம்எல்ஏவிடம் ஆதவ் சொன்ன ‘ஆனந்த் அண்ணன்’ வார்த்தை! நடந்தது என்ன??

    மேலும் படிங்க
    “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

    “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

    தமிழ்நாடு
    விடிந்ததுமே அதிரடி ஆக்‌ஷன்... பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரனை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    விடிந்ததுமே அதிரடி ஆக்‌ஷன்... பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரனை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    தமிழ்நாடு
    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (22-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு மற்றும் கற்பனை சாதகமாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (22-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு மற்றும் கற்பனை சாதகமாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

    “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

    தமிழ்நாடு
    விடிந்ததுமே அதிரடி ஆக்‌ஷன்... பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரனை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    விடிந்ததுமே அதிரடி ஆக்‌ஷன்... பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரனை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    தமிழ்நாடு
    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share