சென்னை எம்.ஆர்.சி. நகரில் ஆலோசனை நடத்திய பிறகு எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய சிவி சண்முகம், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்து இருப்பதாக சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
கடந்த பல தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். அதிமுகவின் வாக்கு வங்கியும் கடுமையாக சரிந்து உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலின் போதும் எடப்பாடி பழனிச்சாமி தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்யவில்லை என்று தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபோதும் ஆறு பேர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.

பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை எனவும் தெரிவித்தார். வலிமையான கூட்டணியை அமைக்க மறுத்த காரணத்தால் தேர்தலில் தோல்வியை சந்தித்து இருப்பதாகவும், தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். இபிஎஸ் உடன் இருந்தால் நல்லவன், இல்லாவிட்டால் நாங்கள் துரோகியா.? என்று கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!
ஒருங்கிணைந்த அதிமுகவே எங்களுடைய ஒரே கோரிக்கை என்றும் பொதுகுழு என்ன முடிவெடுத்தாலும் அதனை தலை வணங்கி ஏற்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க, புதிய தமிழகம் கட்சிகளையும் எடப்பாடி பழனிச்சாமி மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். அடிப்படை உறுப்பினராக இருப்பேன் என்று ஓபிஎஸ் கூறியபோதும் அதனை ஏற்க மறுத்தார் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்துள்ளார். அதிமுகவின் படுதோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என்றும் அதிமுக நிர்வாகிகளை இபிஎஸ் மிரட்டி வைத்துள்ளதாகவும் மீண்டும் தமிழகத்தை அதிமுக ஆள வேண்டும் என்பதை தங்களின் நோக்கம் எனவும் தெரிவித்தார். ஒரு பக்கம் பேசலாம் என சொல்லிவிட்டு மறுபக்கம் பொறுப்பில் இருந்து நீக்குகிறார் என்றும் இபிஎஸ் மீது சரமாரி குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதையும் படிங்க: களேபரமான உட்கட்சி பிரச்சனை..! அதிமுக மா. செ. கூட்டம்..! EPS-க்கு அவைத் தலைவர் ஆதரவு..!