தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எஸ். கீர்த்தனா, சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்தச் சம்பவம் வீடியோவாகப் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வின்போது பள்ளியின் சமையலறை, கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிட்ட அமைச்சர் கீர்த்தனா, மாணவிகளுடன் உரையாடினார். ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டபோது ஒரு மாணவி தயக்கத்துடன் பதிலளிக்கத் திணறினார். அவரது தந்தையின் தொழில் குறித்து கேட்டபோது சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். பின்னர், வகுப்பில் “லாஸ்ட் பெஞ்ச்” மாணவர்கள் குறித்து பேசி, ஆசிரியர்களுக்கு மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்களை நடத்த அறிவுறுத்தினார்.

கணினி அறையில் பயன்படுத்தப்படாத கணினிகள் மீதான தூசு குறித்தும் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ வைரலான நிலையில் கடும் விமர்சனம் எழுந்தது. இதற்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்துள்ளார். நான் அரசு பள்ளி மாணவியை கேலி செய்ததாக பொய்யான கதையை பரப்புகிறார்கள்.,
இதையும் படிங்க: "திமுகவினர் இனி ஜெயிக்கவே முடியாது... புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!" அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!
உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசு பள்ளி மாணவி. தமிழ் வழிக் கல்வியில் படித்தவள் என்று தெரிவித்தார். அரசுப்பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது. ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில் என்றார். பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை என்றும் அது ஊடகங்கள் எடுத்த காட்சி., நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை எனவும் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: டாய்லெட் இல்ல... பிடி சார் இல்ல... நீங்க என்னதான் பண்ணீங்க? அன்பில் மகேஷுக்கு அமைச்சர் கீர்த்தனா கேள்வி!