நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தெற்கு மாவட்டச் செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் உடன்குடியில் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்திற்குத் துரோகம் செய்து வரும் பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்துள்ளது. தற்போது அ.தி.மு.க அலுவலகத்தையே எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு மாற்றிவிட்டார். அமித்ஷாவின் வீடுதான் அ.தி.மு.கவின் அலுவலகமாக உள்ளது” என சரமாரியாக விமர்சித்தார். நேற்று கனிமொழி கூறிய விமர்சனங்களுக்கு இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடைபெற உள்ள பிரச்சார நிகழ்ச்சியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, திமுகவை சேர்ந்த கனி மொழி அவர்கள் அதிமுக அலுவலகம் டெல்லியில் உள்ளதாக பேசியுள்ளார். ஆனால் சென்னையில் தான் உள்ளது. வந்து பார்த்து செல்லுங்கள் என்றார். அதிமுகவை உடைக்க சதி செய்தனர். ஆனால் அத்தனையும் முறியடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பெரியார் விருது பெற்ற கனிமொழி.. துரைமுருகன் வீட்டில் நடந்த சுவாரசிய சம்பவம்..!!
கனிமொழி அவர்களே!, திமுக இரண்டாக பிரிந்த போது அதனை காப்பாற்றியது அதிமுக தான் .அது உங்களுக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பினார். குன்னூர் நகராட்சியில் டெண்டர் எடுத்ததில் ஊழல் நடைபெற்றுள்ளதாக மனு அளித்துள்ளனர்.பச்சை தேயிலைக்கு விலை உயர்ந்தப்படும். டேன்டீ தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.
இதையும் படிங்க: பீகார் போன முதல்வர் ஸ்டாலின்.. கனிமொழி எம்.பி போட்ட பதிவு.. சூடுபிடிக்கும் அரசியல்..!!