தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், காங்கிரஸ் கட்சி தனது உட்கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்திலுள்ள மொத்தம் 77 காங்கிரஸ் மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்குப் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத் தலைவர்களுக்கான அறிவிப்பு மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட ‘சங்கதன் ஸ்ரீஜன் அபியான்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மேலிடப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் அளித்த விரிவான அறிக்கையின் அடிப்படையில் தகுதியான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 7 காங்கிரஸ் மாவட்டங்களில், வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் ஜே. டில்லி பாபுவைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டத் தலைவர்களும் மாற்றப்பட்டுப் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய மாவட்டத் தலைவர்களின் பட்டியல்:
சென்னை: கராத்தே ஆர். செல்வம் (மத்திய சென்னை கிழக்கு), எம்.எம்.டி.ஏ.கே. கோபி (மத்திய சென்னை மேற்கு), மாதரம்மா கனி (வடசென்னை கிழக்கு).
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் தேர்தல் களம்.. மதுராந்தகத்தில் மோடி பொதுக்கூட்டம்: பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்!
மதுரை: போ. நல்லமணி (மதுரை மாநகரம்), ஏ. நூர் முகமது (மதுரை வடக்கு).
திருச்சி: எல். ரெக்ஸ் (திருச்சி மாநகரம்), ஈ.எம். சரவணன் (திருச்சி வடக்கு).
சேலம்: சாரதா தேவி மாணிக்கம் (சேலம் மாநகரம்), ஆர்.கே. தேவேந்திரன் (சேலம் கிழக்கு).
என். ரமேஷ் (கரூர்), ராஜாராம் பாண்டியன் (ராமநாதபுரம்), எஸ். பானுசேகர் (மயிலாடுதுறை), டாக்டர் பி.வி. செந்தில் (நாமக்கல் கிழக்கு).
இந்த அதிரடி மாற்றங்கள் மூலம் தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி புதிய உத்வேகத்துடன் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் நீண்டகாலமாக உழைத்த நிர்வாகிகளுக்கு இந்த முறை அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு மறுக்கப்பட்ட சில மூத்த நிர்வாகிகள் மத்தியில் இது சலசலப்பை ஏற்படுத்தினாலும், தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு மேலிடம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் களத்தில் வேகம் காட்டும் இபிஎஸ்! அதிமுக தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு! விரைவில் சுற்றுப்பயணம்!