விஜய் காரை மறைத்த போது பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உனக்கு அறிவில்லையா, படித்த பெண்தானே என திட்டியதோடு நீ வேறு கட்சிக்கு போ என மரியாதை இல்லாமல் கூறியதாக தவெக கட்சியில் இருந்து விலகி திமுக-வில் இணைந்த அஜிதா ஆக்னல் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் வைத்து சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகிய அஜிதா ஆக்னல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கடந்த 25-ஆண்டு காலமாக விஜய் மக்கள் இயக்கதில் எங்களது குடும்பம் பயணித்தது என்பதை விஜய் மட்டுமல்லாமல் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தூத்துக்குடி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்திற்காக என் முழு குடும்பமும் உழைத்தோம் அதைத்தொடர்ந்து தான் கட்சி ஆரம்பித்த பிறகும் அதில் முழுமையாக ஈடுபாடு உழைத்தேன் என அஜிதா ஆக்னல் கூறினார்.
நான் தவெக கட்சிக்காக கடந்த 2- ஆண்டுகளாக முழுமையாக உண்மையாக உழைத்தேன் ஆனால் என்னை ஒருமுறை கூட நேரில் சந்திக்க சென்றபோது என்னை சந்திக்கவில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என கண்ணீர் மல்க கூறினார். என்னை யாரும் அந்த கட்சியில் மறியாதையாக வழி நடத்தவில்லை என வேதனைப்பட்ட அவர், விஜய் மக்கள் இயக்கத்தில் உண்மையாக உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதையும் சரி பொறுப்புகளும் வழங்கவில்லை என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை என்றார்.

25-ஆண்டு காலமாக எங்கள் குடும்பத்தினருடன் நெருக்கமான பழக்க வழக்கத்தில் இருந்ததால்-தான் நான் உரிமை உடன் தலைவர் விஜய் காரினை மறைத்தேன். ஆனால் என்னை தவறாக நினைத்தனர். எதற்காக காரை மறைத்தேன் என அவரும் அழைத்துப் பேசவில்லை பொதுச்செயலாளர் ஆனந்தும் பின்பக்கமாக ஓடிவிட்டார் என்றார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு முழுமையாக உழைத்த என்னை நிராகரித்துவிட்டு விஜய் நண்பர் ஸ்ரீ நாத்-க்கு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: "வெற்றித் தமிழ்நாடு"... தவெக வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்ட விஜய்..!!
அவருக்கும் தூத்துக்குடிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அவர் விஜயின் நண்பர் மற்றும் மீனவர் என்ற காரணத்திற்காக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை கொடுத்து என்னை புறக்கணித்திருக்கிறார்கள் என வேதனையுடன் தெரிவித்தார். தவெக-வினர் என்னை திமுக கைகூலி என்று சொல்லிவருபவர்களுக்கு என்ன ஆதாரம் உள்ளது என்றும் பெற்ற பிள்ளைகளுக்கே நான் கடன் கொடுதேன் என்று ஒரு தலைவர் சொல்லும் ஒரே கட்சி தவெக-தான்., விஜயின் மனைவியை திமுக கைக்கூலி என சமூக வலைதளங்களில் பதிவிடும் போதே கண்டிக்காத விஜய் எனக்காகவா குரல் கொடுக்கப் போகிறார் என வேதனையுடன் கூறினார்.
இதையும் படிங்க: இன்று வெளியாகிறது தவெக வாக்குறுதி புத்தகம்..! நீலாங்கரையிலிருந்து புறப்பட்ட விஜய்..!