அம்மா உணவகத்திற்கு சாப்பிடவர்களுக்கு இட்லி நோ - மொத்த மொத்தமாக ஹோட்டலுக்கு விற்பனை செய்யப்படும் அம்மா உணவக இட்லி- கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் முறைகேடு என பொதுமக்கள் குற்றச்சாட்டு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தின் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது நாள்தோறும் இந்த உணவகத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் , முதியவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் உணவருந்தி வருகின்றனர்.
இங்கு நாள்தோறும் காலையில் 1200 தயாரிக்கப்படுகின்றன சமீப காலமாக காலை 7:00 மணிக்கு இட்லி விற்பனை தொடங்கும் நிலையில் அரை மணி நேரத்திலே இட்லி விற்பனை முடிந்து விட்டதாக கூறி அங்கு சாப்பிட வருபவர்களுக்கு இட்லி இல்லை என்று கூறி விடுகின்றனர்.
இதையும் படிங்க: உலகப் பொருளாதாரத்திலும், அரசியலிலும் இந்தியாவின் பங்கேற்பு!! கனடா பிரதமர் மார்க் கார்னி புகழாரம்!

ஆனால் சிறு சிறு ஹோட்டல் வைத்திருப்பவர்களுக்கு 80 இட்லி, 60 இட்லி என மொத்த மொத்தமாக கொடுத்துவிட்டு அங்கு சாப்பிட வருபவர்களுக்கு இட்லி இல்லை என்று கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
பொதுவாக அம்மா உணவகத்தில் பார்சல் வழங்கக் கூடாது என்பது விதிமுறையாக உள்ளது அதையும் மீறி பார்சல் வழங்கப்படுவது மட்டுமின்றி மொத்த மொத்தமாக இட்லி விற்கப்படுவதால் அங்கு சாப்பிட வரக்கூடியவர்களுக்கு இட்லி கிடைக்காமல் பரிதிவிக்கின்றனர். இ
துகுறித்து ஊழியர்களிடம் கேட்டால் அதிகாரிகள் சொன்னதைத்தான் நாங்கள் செய்கிறோம் என்று கூறுகின்றனர் . பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தக் கூடாது என்பது அரசு விதிமுறை, ஆனால் அங்கு பார்சல் இட்லி வாங்குபவர்களுக்கு பிளாஸ்டிக் கவரில் இட்லி வழங்கும் நிலையும் உள்ளது.
இதையும் படிங்க: ட்ரம்ப் முன்னிலையில் சீறிய மோடி! கடல்வழிப் போக்குவரத்து, மாலுமிகளைப் பாதுகாப்போம் என சூளுரை!