அரியலூர் மாவட்டம் வாரணவாசி பிள்ளையார் கோவில் அருகே சிலிண்டர் லாரி தீப்பிடித்து கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் வாரணவாசி என்ற கிராமத்தில் வளைவு ஒன்றில் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி திரும்பி உள்ளது. அப்போது திடீரென அந்த லாரியில் இருந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெடித்து சிதறியுள்ளன. இதனால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனால அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பலரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த வெடி சுத்தமானது கேட்டுள்ளது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் அருகே நெருங்க முடியாத அளவிற்கு கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி உள்ளன.
இந்த வண்டி எங்கிருந்து வந்தது? இந்த வண்டியை ஓட்டி வந்தது யார்? எங்கு சென்றது என்ற எந்த தகவலும் தெரியவில்லை. தீணைப்பு துறைக்கு தகவல் தகவல் கொடுக்கப்பட்டதை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயணைக்க போராடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தெலங்கானா: நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசு பேருந்து-லாரி..!! பரிதாபமாக பறிபோன 17 உயிர்கள்..!!
அரியலூர் அருகே சிலிண்டர் லாரியில் தீ விபத்து
சிலிண்டர்கள் லாரியில் வெடித்து சிதறியதின் சத்தம் பல கிலோமீட்டர் தொலைவிற்கு கேட்டுள்ளது,லாரி முற்றிலுமாக எரிந்து தீக்கிரையானது லாரி ஓட்டுனரின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. #அரியலூர் #lorryfire pic.twitter.com/bjuDWnKDOE
— Srini Subramaniyam (@Srinietv2) November 11, 2025
இதையும் படிங்க: காஷ்மீர் டு டெல்லி... செங்கோட்டை அருகே வெடித்த காரின் பகீர் பிண்ணனி ...!