சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பும் கேள்விகளுக்கு இனி முதலமைச்சர் விஜய் பதில் சொல்லக் கூடாது, அதற்குத் துறை சார்ந்த அமைச்சர்களாகிய நாங்களே பதில் கூறுகிறோம்" என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சட்டமன்ற நிருவாக மேலாண்மை, தமிழ்நாடு அரசின் சட்டமன்ற செயல்பாடுகள் மற்றும் பனையூர் த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தின் வியூகங்கள் சார்ந்த செய்தி விபரங்கள் அரசியல் களத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளன. இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய த.வெ.க. மாநில நிருவாகி ஆதவ் அர்ஜூனா, அவை முன்னவர் கே.ஏ. செங்கோட்டையனிடம் இதற்கான தீர்மானத்தைக் கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் மேடைகளில் என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். ஆனால், முதலமைச்சர் விஜய் ஆட்சியில் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசினால் சட்டப்படி கடுமையான கைது நடவடிக்கை பாயும். தைரியமிருந்தால் உதயநிதி ஸ்டாலின் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரட்டும்; சேப்பாக்கம் தொகுதியில் ஒரு சாமானிய மனிதரை நிறுத்தி அவரைத் தோற்கடித்துக் காட்டுகிறோம் எனச் சவால் விடுத்தார்.
இதையும் படிங்க: திடீர் திட்ட மாற்றம்! தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்து செல்லப்பட்ட உதயநிதி!

கடந்த 10 ஆண்டுகளாகப் போதிய நேரத்தில் மழை பெய்ததால் தண்ணீர் வந்தது. இந்த ஆண்டு மழை பெய்யாததால் இயற்கை பொய்த்துவிட்டது. நீதிமன்ற உத்தரவு வந்தும் கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பது அவர்களின் வழக்கமான அடாவடித்தனம். முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லாததற்குக் காரணம், அவர் சென்றாலும் அவர்கள் தண்ணீர் தரப் போவதில்லை, அதேவேளையில் தமிழ்நாடு - கர்நாடக மக்களிடையே பிரிவினையும் தேவையில்லாத பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆகும். காவிரி, இருமொழிக் கொள்கை, நீட் தேர்வு என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சட்டமன்றத்தில் விவாதிக்கத் த.வெ.க. தயாராக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
நாங்கள் ஒரு கண்ணைக் காட்டினால் ஒட்டுமொத்த 'ஜென்ஸீ' (Gen-Z) தலைமுறை இளைஞர்களும் வீதிக்கு வருவார்கள், அதை இந்நாடே தாங்காது. முதலமைச்சர் விஜய் தற்போது நீதியான மனுநீதி சோழன் ஆட்சியை நடத்தி வருகிறார் என்றும் பெருமிதத்துடன் பதிவு செய்தார்.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் இல்லாத வேகம் கைதில் ஏன்? முதலமைச்சர் விஜய்யை நோக்கி சீமான் கேள்வி!