• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மூன்று சகாப்த வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி... ஜந்தர் மந்தர் போராட்ட களம் பற்றி பலரும் அறியாத உண்மைகள்...!

    ஜனநாயகப் போராட்டங்களின் தடமாகவும், பல தலைமுறைகளின் ஜனநாயகக் குரல் ஒலித்த இடமாகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
    Author By Amaravathi Tue, 13 Oct 2026 09:53:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    delhi jantar mandar protest history

    டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஜந்தர் மந்தர் சாலை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல போராட்டங்கள் நடைபெற்ற இடமாகும். அதன் வரலாற்றுப் பின்னணி குறித்து பார்க்கலாம். 

    ஜந்தர் மந்தர் சாலை என்பது வெறும் போராட்டக் களம் மட்டுமல்ல; இந்திய வானியல் வரலாற்றின் முக்கியமான இடமாகவும் திகழ்கிறது. ஜெய்ப்பூர் மகாராஜா சவாய் ஜெய் சிங்கால் 18ஆம் நூற்றாண்டில் வானியல் ஆய்வுகள் மற்றும் நேரத்தைக் கணக்கிடுவதற்காக 1724ஆம் ஆண்டு கட்டப்பட்டதே ஜந்தர் மந்தர்.

    சமஸ்கிருத மொழியில் ‘ஜந்தர்’ என்றால் கருவி என்றும், ‘மந்தர்’ என்றால் கணக்கீடு என்றும் பொருள். இங்கு அமைந்துள்ள சாம்ராட் யந்திரா, ஜெயபிரகாஷ் யந்திரா, ராம் யந்திரா ஆகிய கருவிகள், நவீனத் தொலைநோக்கிகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே சூரியன் மற்றும் கோள்களின் நிழல்களை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்பட்டன.

    இதையும் படிங்க: டெல்லி போராட்டத்திற்கு செக்...! ஜந்தர் மந்திரில் போராட தடை..! காவல்துறை அறிவிப்பு..!

    இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதி, 1993ஆம் ஆண்டில் தான் ஜனநாயகப் போராட்டங்களுக்கான முக்கியக் களமாக மாறியது. அதுவரை போராட்டங்கள் நடைபெறும் இடமாக இருந்த டெல்லி போட் கிளப் பகுதியில், 1988ஆம் ஆண்டு மகேந்திர சிங் திகாயத் தலைமையில் லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டு நடத்திய மாபெரும் போராட்டத்தால் தலைநகரமே ஸ்தம்பித்தது.

    இதையடுத்து, அங்கு போராட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டு, 1993ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு அருகே உள்ள ஜந்தர் மந்தர் சாலை போராட்டங்களுக்கான இடமாகத் தேர்வு செய்யப்பட்டது.

    டெல்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், நாட்டின் முக்கியப் பிரச்சினைகளை எதிரொலிக்கும் போராட்டங்களின் மையமாக ஜந்தர் மந்தர் சாலை உருவெடுத்தது.

    பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நிர்பயாவுக்கு நீதி கோரி நடைபெற்ற போராட்டம், அண்ணா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், ராணுவ வீரர்களுக்கு ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டம் உள்ளிட்ட பல முக்கியப் போராட்டங்கள் இங்கு நடைபெற்றுள்ளன.

    வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இடத்தில் போராட்டங்கள் நடைபெறுவதால் காற்று மாசுபாடு மற்றும் ஒளி மாசுபாடு ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, குறைந்த எண்ணிக்கையிலானோர் பங்கேற்கும் போராட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், டெல்லியில் போராட்டங்களை நடத்துவதற்கான மாற்று இடங்களை ஆராய மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருந்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், போராட்டங்கள் நடத்துவதற்கான இடங்களின் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டுள்ளது.

    அதற்குப் பதிலாக, ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய மூன்று இடங்கள் போராட்டங்கள் நடத்துவதற்கான இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த மூன்று இடங்களிலும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் தெரிவித்துள்ளார்.

    தொன்மையான வரலாற்றுச் சின்னமாகத் திகழ்ந்த ஜந்தர் மந்தர் பகுதி, கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் நடைபெற்ற ஜனநாயகப் போராட்டங்களின் தடமாகவும், பல தலைமுறைகளின் ஜனநாயகக் குரல் ஒலித்த இடமாகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

    இதையும் படிங்க: உச்சக்கட்ட பரபரப்பு...!! - விடிந்ததுமே தலைகீழாக மாறிய டெல்லி... இன்று மாலை 4 மணி வரை அதிரடி கட்டுப்பாடு அறிவிப்பு...!

    மேலும் படிங்க
    பொங்கலுக்கு வெளியாகுமா ‘இந்தியன் 3’? கமல்ஹாசன், அனிருத்துக்கு சம்பள பாக்கி.. லைகா நிறுவனத்திற்கு காத்திருக்கும் நெருக்கடி..!

    பொங்கலுக்கு வெளியாகுமா ‘இந்தியன் 3’? கமல்ஹாசன், அனிருத்துக்கு சம்பள பாக்கி.. லைகா நிறுவனத்திற்கு காத்திருக்கும் நெருக்கடி..!

    சினிமா
    ‘பாக்கெட் நாவல்’ படத்திலிருந்து விலகிய இளையராஜா..!! இயக்குனநடன் ஏற்பட்ட பிரச்சனை.. ஜி.வி. பிரகாஷுக்கு கிடைத்த வாய்ப்பு..!

    ‘பாக்கெட் நாவல்’ படத்திலிருந்து விலகிய இளையராஜா..!! இயக்குனநடன் ஏற்பட்ட பிரச்சனை.. ஜி.வி. பிரகாஷுக்கு கிடைத்த வாய்ப்பு..!

    சினிமா
    மயிலம் தொகுதி தேர்தல் சர்ச்சை..! சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம்..!

    மயிலம் தொகுதி தேர்தல் சர்ச்சை..! சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம்..!

    தமிழ்நாடு
    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு..! எழும்பூரில் ரயில் மறியல்... குண்டுக்கட்டாக கைது..!!

    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு..! எழும்பூரில் ரயில் மறியல்... குண்டுக்கட்டாக கைது..!!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த திரைப் பிரபலங்கள்..!! ‘பிரேக்கிங் பேட்’ நடிகர் ஆர்.ஜே. மிட், மராத்தி நடிகை மது காம்பிகர் மறைவு – திரையுலகில் பெரும் சோகம்..!

    ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த திரைப் பிரபலங்கள்..!! ‘பிரேக்கிங் பேட்’ நடிகர் ஆர்.ஜே. மிட், மராத்தி நடிகை மது காம்பிகர் மறைவு – திரையுலகில் பெரும் சோகம்..!

    சினிமா
    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மயிலம் தொகுதி தேர்தல் சர்ச்சை..! சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம்..!

    மயிலம் தொகுதி தேர்தல் சர்ச்சை..! சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம்..!

    தமிழ்நாடு
    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு..! எழும்பூரில் ரயில் மறியல்... குண்டுக்கட்டாக கைது..!!

    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு..! எழும்பூரில் ரயில் மறியல்... குண்டுக்கட்டாக கைது..!!

    தமிழ்நாடு
    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    உலகம்
    அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி  ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக  ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    அரசியல்

    "உயிர் தியாகம்"..! சங்கர லிங்கனார் நினைவு நாள்..!! முதல்வர் விஜய், ஸ்டாலின் வீரவணக்கம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share