நத்தம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வைத்த வெடி வெடித்து விபத்தா அல்லது வனவிலங்குகளை வேட்டையாட எடுத்துச் சென்ற தாக கூறப்படும் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை.
நத்தம் அருகே துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. அவருடன் சென்றிருந்த ஒருவரை பிடித்து வந்து சாணார்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள சிறுமலை அடிவார பகுதியில் உள்ள அஞ்சுகுளிப்பட்டியில் காட்டுப்பகுதியில் நத்தம் முளையூரை சேர்ந்த தங்கராஜ் மகன் மாணிக்கம் (வயது 22), அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்த சந்தானம் (வயது 35). ஆகிய இருவரும் வேட்டைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது காட்டுப்பகுதியில் திடீரென துப்பாக்கி வெடித்ததில் முளையூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் மாணிக்கம் (வயது 22) என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். காயமடைந்தவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சாணார்பட்டி காவல்துறையினர் காயமடைந்தவருடன் சென்ற சந்தானம் என்பவரை சாணார்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING கர்நாடகாவில் 3 தமிழர் சுட்டுக்கொலை... வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு... FIR-ல் முக்கிய ட்விஸ்ட்...!
துப்பாக்கி வெடித்ததா அல்லது வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த வேறு ஏதேனும் வெடி பொருள் வெடித்ததா என்பது குறித்து சாணார்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி வெடித்ததாக கூறிய சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கரப்பான்பூச்சி கட்சியை குறிவைக்கும் கூட்டணி கணக்கு? ஆப்ஜித் தீப்கேவுக்கு மத்திய அமைச்சர் திடீர் அழைப்பு!