• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    பற்றாக்குறை காவிரி நீரைக் கணக்கிட்டு 17.604 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் உடனடியாகத் திறக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 30 Aug 2026 20:43:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Direct Karnataka to release 17.604 TMC deficit water immediately: Tamil Nadu files affidavit in Supreme Court

    காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு வந்து சேர வேண்டிய பற்றாக்குறை நீரான 17.604 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாகத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைக் கர்நாடகம் முறையாகச் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று அதிரடியாக விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.

    காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணை தொடர்பான முக்கிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ள சூழலில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த மனு பெரும் சட்டப் போராட்டத்திற்கான களத்தை அமைத்துள்ளது. 

    கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை நீரைச் சரிகட்டும் வகையில் வினாடிக்கு 22,000 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு ஆணித்தரமாகக் கோரிக்கை வைத்தது. 

    இதையும் படிங்க: இறங்கி வந்த கர்நாடகா.. தமிழகத்தை நோக்கி மீண்டும் பாய்கிறது காவிரி! நீர்திறப்பு அதிகரிப்பு!!

    கர்நாடகா

    அவ்வாறு திறந்தால் மட்டுமே தமிழகத்திற்குரிய 28 டிஎம்சி நீர் கிடைக்கும் என சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், தமிழகத்தின் நியாயமான கோரிக்கையைப் புறந்தள்ளிவிட்டு வினாடிக்கு வெறும் 9,000 கன அடி மட்டுமே திறக்க ஆணையம் ஒருதலைப்பட்சமாக உத்தரவிட்டது. ஆனால், ஆணையம் பிறப்பித்த அந்தச் சொற்ப உத்தரவைக் கூட கர்நாடக அரசு சிறிதும் மதிக்காமல் செயல்படுத்தத் தவறிவிட்டதாகத் தமிழக அரசு தனது மனுவில் மிகக் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது. 

    குறிப்பாக, கடந்த 27-ஆம் தேதி நிலவரப்படி கர்நாடக அணைகளில் 72.961 டிஎம்சி நீர் இருப்பு இருந்த நிலையிலும் தமிழகத்திற்குரிய நீரைத் திறந்துவிடாமல், பாசனக் கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் மூலமாக 20 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 

    உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதம் முதல் தற்போது வரை தமிழகத்திற்கு 80.451 டிஎம்சி நீர் கிடைத்திருக்க வேண்டும்; ஆனால் கர்நாடகம் வெறும் 25.598 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. வறட்சிக் கால விகிதாச்சாரக் கணக்கீட்டின்படி பார்த்தாலும் கிடைக்க வேண்டிய 43.202 டிஎம்சி நீருக்குப் பதிலாகப் பெருமளவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக அரசின் இத்தகைய பிடிவாதப் போக்காலும் சட்டவிரோத நடவடிக்கைகளாலும் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், குறுவை சாகுபடிக்கான நீரைக் கூடத் திறந்துவிட முடியாமல் தமிழகம் தவித்து வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    எனவே, உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு, தமிழகத்தின் உரிமையான 17.604 டிஎம்சி பற்றாக்குறைத் தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட கர்நாடகத்திற்குத் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: காவிரி நீரில் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமை உண்டு! கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்!

    மேலும் படிங்க
    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    தமிழ்நாடு
    வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

    வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

    இந்தியா
    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    தமிழ்நாடு
    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share