2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதி சென்னையின் முக்கியமான ஒரு தொகுதியாகக் கருதப்படுகிறது. இது வட சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது மற்றும் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கியது. இத்தொகுதியில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், இத்தொகுதியின் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.திமுக சார்பில் ஏ. சுபைர் கான் போட்டியிடுகிறார்.
இவர் ஒரு புகழ்பெற்ற எலும்பு மருத்துவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ. ரஹ்மான் கானின் மகன். 2021 தேர்தலில் திமுக இத்தொகுதியை வென்றிருந்ததால், இம்முறை திமுக தனது வெற்றியைத் தக்கவைக்க இவரை நம்பி களமிறக்கியுள்ளது. சுபைர் கான் உள்ளூர் மக்களின் பிரச்சினைகளை அறிந்தவர் என்றும், மருத்துவ சேவை அனுபவம் கொண்டவர் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், அனுபவம் மிக்க தலைவருமான டி. ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.

இவர் ராயபுரம் தொகுதியில் பல முறை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இத்தொகுதியில் வெற்றி பெற்றவர். 2021இல் தோல்வியுற்றாலும், இம்முறை மீண்டும் களமிறங்கி தொகுதியை மீட்டெடுக்க அதிமுக நம்பிக்கை வைத்துள்ளது. ஜெயக்குமார் அதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும் உள்ளார்.தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் தாமு போட்டியிடுகிறார். விஜய்யின் தலைமையிலான இந்த புதிய கட்சி தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. விஜயதாமு தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டைக் காப்பாற்றும் இறுதி யுத்தம் இது..! வன்முறை காடாக மாறிய மாநிலம்..! EPS குற்றச்சாட்டு..!
இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் ஓயும் நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பண பட்டுவாடாவை தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் பண பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சிலர் பண பட்டுவாடா செய்த நபரைப் பிடித்து சோதனை செய்து உள்ளனர். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்தனர். பண பட்டுவாடா செய்து கொண்டு இருந்த திமுகவினரை கையும் களவுமாக பிடித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவின. தேர்தலுக்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் பண பட்டுவாடா செய்த திமுகவினரை பிடித்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 2026 தேர்தல்..! 3 நாட்கள் மது கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு..!