கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மத்திய அரசால் கடந்த 25ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி 100 நாட்கள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான அட்டை வைத்திருப்பவர்கள் வேலை தேவைப்பட்டால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்த பட்சம் 100 நாட்கள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்கும்.
கிராமப்புறத்தில் வசிக்கும் வயதானவர்களை மனதில் வைத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. வயதான காலத்திலும் அவர்களுக்கு ஊதியம் கிடைக்க உதவி செய்கிறது. 100 நாள் வேலை திட்டத்தின் மாற்றங்கள் அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம் உள்ளிட்டவை உள்நோக்கம் கொண்டது என்று கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நேற்று தமிழகம் முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக, அதிமுகவுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில் எது உண்மை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழக மக்களை அவ்ளோ சீக்கிரம் ஏமாத்த பாக்குறீங்களா? பகல் கனவு பலிக்காது... நயினார் விமர்சனம்..!
100 நாள் வேலைத்திட்டம் குறித்து திமுக அரசு பொய்யான தகவல் தெரிவித்து போராட்டம் நடத்தியதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். வேலை நாட்களை 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியிருப்பதுதான் உண்மை என விளக்கம் அளித்துள்ளார். தேவையில்லாமல் திமுக குற்றம்சாட்டி வருவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அனைத்திலும் இந்தி திணிப்பு...! பாஜகவையும், அதிமுகவையும் வீழ்த்த வேண்டும்... - டி.ஆர்.பாலு திட்டவட்டம்..!