மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். மதுராந்தகத்தில் நடக்கும் NDA கூட்டணி கூட்டத்தில் பிரதமர் என்ன பேசுகிறார் என்று நாடே உற்றுநோக்கி கொண்டிருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
என் டி ஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பதால் இயற்கையே இன்று சூரியனை மறைத்து விட்டது என்று தெரிவித்துள்ளார். விழா மேடையில் உரையாற்றிய இபிஎஸ், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் வரவேற்றார். குறிப்பாக அண்ணாமலையின் பெயரை கூறியதும் தொண்டர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. எல்லா துறைகளிலும் ஊழல் நடப்பதாகவும் ஊழல் இல்லாத துறையே இல்லை என்றும் மக்கள் விரோத ஆட்சி உங்களுக்கு தேவையா என்று கேள்வி எழுப்பினார்.

திமுக அரசு மக்களுக்கு கொடுத்தது வேதனை மட்டும்தான் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். நம்மை எதிர்ப்பவர்கள் தீயவர்களாக இருந்தாலும் உரியவர்களோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று கூறினார். ஒரே குடும்பம் வாழ 8 கோடி பேரை சுரண்டுவதா என்று கேள்வி எழுப்பிய அவர், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் இன்று உருவாக்குவதற்காக செயல்பட்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார். எந்த தகுதியும் இல்லாத உதயநிதியை சட்டமன்ற உறுப்பினராக்கி, அமைச்சராக்கி தற்போது துணை முதலமைச்சர் ஆக ஆக்கி இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சும்மா தெறிக்குதுல்ல..! EPS பெயரை உச்சரித்த TTV..! அரங்கம் அதிர தொண்டர்கள் உற்சாகம்..!
திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் அவர்களின் ஒரே சாதனை ஊழல்.. ஊழல்.. ஊழல் மட்டும் தான் என்று கூறினார். திமுகவுக்கு இதுவே இறுதி தேர்தல் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கூறிய இபிஎஸ் ஜெயலலிதா பாணியில் செய்வீர்களா என்ற தொண்டர்களை நோக்கி கேள்வி எழுப்பினார். தேர்தல் போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 210 இடங்களில் வெற்றி பெறுவோம் எனவும் எடப்பாடி பழனிச்சாமி உறுதியுடன் கூறினார்.
இதையும் படிங்க: ஜி ராம்ஜி தீர்மானம்... ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..! இபிஎஸ்க்கு ட்விஸ்ட் வைத்த முதல்வர்..!
14 ஆயிரம் கோடியில் நடந்தாய் வாழி காவிரி திட்டம் தொடங்கப்பட்டதாகவும் அதனை தற்போது முடக்கி இருப்பதாகவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கேட்ட நிதி மத்திய அரசு வழங்கியதாகவும் அதிமுக ஆட்சி கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கி இருப்பதாகவும் தெரிவித்தார். கொரோனா காலத்தில் எடுத்த நடவடிக்கையால் பல கோடி மக்களை காப்பாற்றியவர் பிரதமர் மோடி என்றும் கூறினார்.