கடந்த 2025 செப்டம்பரில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் இருந்து அமமுக விலகியது. அப்போது டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மறுப்பு தெரிவித்து, "துரோகம்" உள்ளிட்ட கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அமமுகவுக்கு தேசிய கட்சியான பாஜகவின் மாநில தலைமை நயினார் நாகேந்திரன்bமுக்கியத்துவம் கொடுக்காமல், எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக கூட்டணி முடிவுகளை எடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுகவை வீழ்த்துவதற்கான "பெரிய இலக்கு" கருதி, டிடிவி தினகரன் தனது நிலைப்பாட்டில் மாற்றம் செய்தார். சென்னையில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உடன் சந்திப்புக்குப் பிறகு, அமமுக NDA-வில் இணைவதாக அறிவித்தார். இதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அன்போடு வரவேற்பதாக தெரிவித்து இருந்தார். இருப்பினும் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் பெயரைக் கூட சொல்லாமல் டிடிவி தினகரன் சென்று விட்டார். பிறகு சமூக வலைதள பக்கத்தில் தனக்கு வரவேற்பு தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி கூறி இருந்தார்.

இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி பெயரைக் கூட உச்சரிக்காமல் அவர் சென்று விட்டதாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. பிரதமர் மோடி பங்கேற்றுள்ள இந்த பொதுக்கூட்டத்தில் NDA கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த விழா மேடையில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டில் மீண்டும் மக்களாட்சியை உருவாக்க பிரதமர் மோடி வருகை தந்துள்ளார் என்று தெரிவித்தார். இதுவரை எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன் பொதுக்கூட்ட மேடையில் அவரை வரவேற்றார். என்டிஏ கூட்டணியின் தமிழ்நாடு தலைவர், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி என டிடிவி தினகரன் கூறியதும் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
இதையும் படிங்க: ஜி ராம்ஜி தீர்மானம்... ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..! இபிஎஸ்க்கு ட்விஸ்ட் வைத்த முதல்வர்..!
அரங்கம் அதிர முழக்கங்களை எழுப்பினர். மக்கள் விரோத குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் என்டிஏ கூட்டணிகள் இணைந்திருப்பதாக தெரிவித்தார். தமிழ்நாடு கொலை, கொள்ளைக்களமாக மாறிவிட்டது என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையை முழுமையாக ஏற்று என்டிய கூட்டணியில் இணைந்து இருப்பதாக தெரிவித்தார். யாருடைய அழுத்தத்தின் பெயரிலும் கூட்டணியில் இணையவில்லை என்றும் மனதிற்குள் இருந்த கோப, தாபங்களை தூக்கி எறிந்து விட்டு என் டி ஏ கூட்டணியில் மீண்டும் இணைந்து இருப்பதாக தெரிவித்தார். மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவதில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: ஒவ்வொரு முறையும் அதிமுக தான் தேர்தல் அறிக்கை முதலில் வெளியிடும்..! விமர்சனங்களுக்கு இபிஎஸ் பதிலடி..!