உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருச்சியில் இருந்து அரசு விரைவு பேருந்து ஒன்று 22 பயணிகளை ஏற்றுக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தை சிவகுரு (38) என்பவர் ஒட்டிச் சென்றார். இந்த பேருந்து சற்று முன் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர 20 அடி பள்ளத்தில் கவிந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பேருந்தில் சென்ற 10 பேர் படுகாயம் அடைந்தனர். உடன் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்றேன் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் படுங்காயம் அடைந்தவர்ளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: எத்தியோப்பியாவில் சோகம்: பள்ளத்தில் பாய்ந்த பேருந்து..!! 31 பேர் பரிதாப பலி..!!
இந்த விபத்தினால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்குள்ளான அரசு பேருந்து கிரேன் மூலம் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். காலை ஒரு 20 அடி பள்ளத்தில் அரசு விரைவு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பாக்.-ல் கோர சம்பவம்: பயங்கரமாக மோதிக்கொண்ட பேருந்துகள்.. 17 பேர் பரிதாப பலி..!!