மேற்காசியப் பகுதியில் தீவிரமடைந்து வரும் போர் சூழ்நிலை, உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழி ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்பும் கடுமையான பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி, உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தளங்கள் அமைந்த பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக வர்த்தகத்திற்கு முக்கியமான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் தற்காலிகமாக மூடியுள்ளது. இதனால் சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சில நட்பு நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ஈரான் – அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்ய முனைந்துள்ள பாகிஸ்தானை, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் (S.Jaishankar) கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: நாங்க அப்பிடி சொல்லவே இல்லையே! இந்திய கப்பல்களுக்கு அனுமதி?! ஈரான் மறுப்பு!

மத்திய கிழக்குப் போர் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவர் பேசியபோது, “இந்தியா ஒருபோதும் பாகிஸ்தானைப் போல தரகர் நாடாக செயல்படாது. நமது வெளியுறவுக் கொள்கை தன்னாட்சி உடையது. யாருக்காகவும் மத்தியஸ்தம் செய்வதில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் கடந்த காலத்திலிருந்தே இடைத்தரகர் பங்கு வகித்து வருவதாகவும், 1981ஆம் ஆண்டு முதலே அமெரிக்கா தனது தேவைகளுக்காக அந்த நாட்டைப் பயன்படுத்தி வருவதாகவும் ஜெய்சங்கர் (S.Jaishankar) குறிப்பிட்டார்.
இதற்கு முன், நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் Tariq Anwar, பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்படுகிறது என்றும், இந்தியா மவுன சாட்சியாக உள்ளது என்றும் விமர்சித்திருந்தார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்ஜ் சிங் (Rajnath Singh), உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி (Rahul Gandhi) கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் இதில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது. இரண்டு மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில், மேற்காசிய நிலைமை மற்றும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஜெய்சங்கர் தரமான சம்பவம்! இந்தியா - ஈரான் இடையே ஒப்பந்தம்! இனி ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்!!