மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து, போலியான முறையில் பத்திரப்பதிவு செய்ததாகக் கூறப்படும் ஐந்து நபர்களை தற்போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் மற்றும் அழகர் கோவிலை பராமரிப்பதற்காக கடந்த 1930-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான அசோகா பங்களா மற்றும் அதன் தோட்டம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 60 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அந்த இடத்தை போலியான முறையில் ஒன்பது தனிநபர்களுக்கு சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கில், மதுரை வடக்கு வட்டாட்சியராக பணியாற்றிய அன்பழகன் தற்போது ராமநாதபுரம் மாவட்ட துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: "மதுரை பயலுகடா... கொடூரமா"..! LED பலகையுடன் ஓடிய அரசு பேருந்து..!! சர்ச்சை..!
மேலும், இதில் தொடர்புடைய விஏஓ அரசன் மற்றும் இளவரசு ராஜகுமார் ஆகியோரையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய 19 நபர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், மேலும் இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்த விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்தை ஆட்டையைப் போட்ட விவகாரம்... துணை ஆட்சியருக்கு நேர்ந்த பரிதாபம்...!