தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு செயல்முறையில் மிகப்பெரிய முறைகேடு மற்றும் ஊழல் நடைபெற்றுள்ளதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட விரிவான பதிவில் ஜோதிமணி இந்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார்.
ஜோதிமணி தனது பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. வேட்பாளர்களைத் தேர்வு செய்த பிறகு அதற்குத் தகுந்தது போல தொகுதிகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன. சர்வே என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த செயல்முறையில் நீண்டகாலமாக கட்சிக்கு பணியாற்றியவர்கள், வெற்றி வாய்ப்பு உள்ள தகுதியான தொண்டர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாகவும், புதியவர்கள் மற்றும் வெற்றி வாய்ப்பு குறைவானவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், சில வேட்பாளர்கள் தேர்தல் முடிந்த சில நாட்களுக்குள் கட்சியிலிருந்து விலகியது அல்லது ஒதுங்கியது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இத்தகைய முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்பதை ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். “இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு வழங்கியது யார்? எதனடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது?” என்று அவர் நேரடியாகக் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தை அழிக்க துடிக்கும் பாஜக.. காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுடையது..!! ஜோதிமணி எம்.பி சாடல்..!!
சர்வே எடுப்பதாக கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மிகபெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என்று கூறிய ஜோதிமணி, தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டது தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கமிட்டி என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சென்னையில் உச்சக்கட்ட கொடூரம்... மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை நாசம் செய்த வட மாநிலத்தவர்கள்...!