ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் பணப் பரிவர்த்தனைகளை தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் மிகப்பெரிய அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளன. 2017-ஆம் ஆண்டு என்ஐஏ (தேசிய புலனாய்வு அமைப்பு) ஹவாலா வழிகளை முடக்கிய பிறகு, பயங்கரவாத அமைப்புகள் 'டிஜிட்டல் ஹவாலா' என்ற புதிய முறைக்கு மாறின.
இதில், பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஆன்லைன் பாஸ்வேர்டுகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியுள்ளனர். குறைந்த நேரத்தில் கை நிறைய பணம் தருவதாக ஆசை காட்டி, சிலரின் வங்கி கணக்குகளை கைப்பற்றியுள்ளனர். இந்த கணக்குகள் மூலம் சிறிய தொகைகளாக பிரித்து பணம் அனுப்பப்பட்டுள்ளது. மக்களுக்கு தெரியாமலேயே அவர்களது கணக்குகள் பயங்கரவாத நிதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைப்புகளின் தீவிர விசாரணையில் சுமார் 8000 வங்கி கணக்குகள் இதற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக இந்த கணக்குகள் முடக்கப்பட்டன. இதில் பல கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தொடர்புடைய முக்கிய நபர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

காஷ்மீர் போலீசார் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். “பணத்துக்கு ஆசைப்பட்டு உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் அல்லது ஆன்லைன் பாஸ்வேர்டுகளை யாருக்கும் கொடுக்க வேண்டாம்.
அது தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால், கணக்கு உரிமையாளர்களும் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள். கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளனர்.
இந்த டிஜிட்டல் ஹவாலா முறை மூலம் பயங்கரவாதிகளுக்கு நிதி அனுப்புவது எளிதாகிவிட்டது. ஆனால், பாதுகாப்பு படைகளின் தீவிர கண்காணிப்பால் இந்த வலையை உடைத்துள்ளனர்.
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இத்தகைய மோசடிகளை முழுமையாக தடுக்க முடியும். வங்கி கணக்கு விவரங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். யாராவது பணம் தருவதாக ஆசை காட்டினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள்.
இதையும் படிங்க: மன்னிக்கவே முடியாது... பெயில் கேக்குதோ? அஜித் குமார் கொலை வழக்கில் காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!