கேரளாவில் குடும்ப பிரச்சினை காரணமாக கிணற்றில் குதித்த பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பெண்ணை மீட்பதற்காக தீயணைப்பு வீரர்கள் சென்றுள்ளனர். கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும் என்ற போது எதிர்பாராத விதமாக கிணற்றின் பக்கச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அந்தப் பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் ஒரு சமூகத்தின் முதுகெலும்பாகத் திகழும் தியாக உள்ளங்கள். அவர்களின் பணி என்பது வெறும் வேலை மட்டுமல்ல, உயிர்களையும் உடைமைகளையும் காக்கும் உயர்ந்த பொறுப்பு. தீயணைப்பு வீரர்களின் பணி வெறும் தீ அணைப்புடன் முடிவதில்லை. அவர்கள் அவசர மீட்புப் பணிகளிலும் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

உயரமான கட்டிடங்களில் இருந்து மக்களை மீட்பது, ஆழமான கிணறுகளில் விழுந்தவர்களைக் காப்பாற்றுவது, அல்லது ஆபத்தான இடங்களில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது போன்ற பணிகளை அவர்கள் திறம்பட செய்கின்றனர். ஆனால் கேரளாவில் நிகழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கேரளாவை மிரட்டும் அமீபா மூளைக்காய்ச்சல்... மேலும் 2 பேரை காவு வாங்கிய கொடுமை!
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா என்ற பெண். இவர் குடும்ப பிரச்சனையின் காரணமாக அந்த பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சென்றனர். அர்ச்சனாவை மீட்க முயன்ற போது அந்த கிணற்றின் பக்கச்சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தற்கொலைக்கு முயன்ற அர்ச்சனா, மீட்க சென்ற தீயணைப்பு வீரர், அர்ச்சனாவின் இரண்டாவது கணவர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கொஞ்ச நேரத்துல வெடிக்க போகுது! தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!