மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாதத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் மின்வட்டை சரி செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் நிலவையே கடுமையான மின்வெட்டை சரி செய்து மின்சார மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா என்று தெரிவித்தார். நிலையற்ற அரசாக தமிழக வெற்றி கழக அரசு இருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டதாகவும் மின்துறை அமைச்சராக வீர வசனம் பேசும் நிர்மல் குமார் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். இருபது ரூபாய்க்கு மின்சாரம் வாங்கும் ஒப்பந்தத்தை நிர்மல் குமார் ரத்து செய்ததாகவும் குறிப்பிட்டார். ஐந்து மாத காலமாக சரியாக மின் கொள்முதல் செய்யாமல் மின்தடையை ஏற்படுத்தினார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மின் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கி ஒரு யூனிட் மின்சாரத்தை 37 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக நிர்மல் குமார் கூறுவதாகவும் மின்சார கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: “உங்க நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே சிரிக்குது...” - தவெக அமைச்சர் சிடிஆரை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடியார்...!
மேலும் தண்டனை பெற்ற கைதிகளை கூட பாதுகாக்க முடியாத அரசாக தமிழக வெற்றிக்கழக அரசு இருக்கிறது என்றும் முதலமைச்சர் விஜய் புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்ட சில தினங்களில் கைதிகள் தப்பி ஓடியதாகவும் கூறியுள்ளார். ஜோசியர் கூறியதற்காக புழல் சிறைக்கு சென்று வந்தாரா முதல்வர் விஜய் என்று கேள்வி எழுப்பினார். காணாமல் போன குழந்தைகளை கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் செஞ்சி சிறுமி எங்கே எனவும் ஈபிஎஸ் கேள்வி எழுப்பினார். கசாப்பு கடையில் ஆடுகளை வெட்டுவதைப் போல மக்களை வெட்டுகிறார்கள் என்றும் அரசு ஊழியர்களைப் போல முதலமைச்சர் விஜய் விடுமுறை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!