மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை காண 500 ரூபாய் கட்டணம் செலுத்தி டோக்கன் வாங்கிய பக்தர்களை இடமில்லை என கூறி அனுமதிக்காததால் கோவில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துடைய சித்திரை திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையிலே பத்தாம் நாள் விழாவாக அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரடைய திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினைக் காண மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருக்கல்யாண வைபவத்தன்று கோவிலிலே வருகை தர வேண்டும் என்று ஏராளமான சுமங்கலி பெண்களும் பக்தர்களும் பொதுமக்களும் ஆன்லைன் மூலம் ரூபாய் 200 மற்றும் 500 கட்டணம் செலுத்தி, தகுதியுடைய டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் கிட்டத்தட்ட நீண்ட வரிசையில் காத்திருக்கக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டது.
திருமணம் நடைபெறக்கூடிய மண்டபம் பகுதியில் போதுமான பக்தர்கள் ஏற்கனவே வந்த நிலையில் உள்ளே பாதுகாப்புக் கருதி அனுமதிக்க முடியாது என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கக்கூடிய காவலர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், “நாங்கள் சென்னையில் இருந்து வந்திருக்கிறோம், தருமபுரியிலிருந்து வந்திருக்கிறோம், அதிகாலை 4:00 மணியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம், 500 ரூபாய் டோக்கன்கள் பெற்றும் எங்களை ஏன் உள்ளே அனுமதி முடியாது” மனக்குமுறலை வெளிப்படுத்தனர்.
இதையும் படிங்க: கள்ளழகரை குளிர்விக்கும் தோல் பை... இதுல இவ்வளவு விஷயம் இருக்கா... யாருமே அறியாத பின்னணி...!
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யான வைபவத்தின் போது சுமங்கலி பெண்கள் தங்களது தாலி கயிற்றை புது மஞ்சள் கயிறாக மாற்றிக் கொள்வது வழக்கம். இந்த ஐதீகம் கோயில் வளாகத்திலேயே நடக்கும். தற்போது 500 ரூபாய் டோக்கன் வாங்கி கூட நீண்ட வரிசையில் காத்திருந்து எங்களால் உள்ளே செல்ல முடியவில்லையே இந்த பணத்தை கோவில் நிர்வாகம் திரும்ப கொடுக்குமா? இல்லை இதற்கான மாற்று ஏற்பாடுகள் இருக்கிறதா? ஒவ்வொரு வருடமும் இதே போன்று ஒரு நிலை நீடித்தால் வரக்கூடிய பக்தர்களுடைய நிலைதான் என்ன? என்றும் பல கேள்விகள் முன்வைத்து பக்தர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சித்திரை திருவிழா களைகட்டியாச்சு..! அழகர் கோவிலில் இருந்து கிளம்பிய கள்ளழகர் வாகனங்கள்..!