பேரையூர் அருகே கள்ளகாதல் விவகாரத்தில் 9 மாத பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து படுகொலை செய்த கொடூரம் - குழந்தையின் தாய், தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் - மெய்யணூத்தப்பட்டியை அடுத்துள்ள இராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாண்டித்துரை - கலைச்செல்வி தம்பதி., இவர்களுக்கு ஏற்கனவே 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கலைச்செல்வி அதே ஊரைச் சேர்ந்த வேறு நபருடன் தகாத உறவில் இருந்தது கண்டறியப்பட்டு, பிரச்சனையாகி குழந்தைக்காக கணவன், மனைவி இருவரும் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: விடிந்ததுமே பேரதிர்ச்சி... கல்லால் அடித்து இளைஞர் கொலை... நெல்லையில் அரங்கேறிய பயங்கரம்...!
மேலும் கருவுற்றிருந்த கலைச்செல்வி கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்., இந்த குழந்தை தனக்கு பிறந்ததா என்ற சந்தேகத்திலேயே இருந்த பாண்டித்துரை, குழந்தைக்கு பெயர் கூட வைக்காமல் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த குழந்தையை வைத்து தனது கணவன் அடிக்கடி தகராறு செய்து வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான கலைச்செல்வி, கடந்த மே மாதம் 8 ஆம் தேதி தனது 9 மாத குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து படுகொலை செய்துள்ளார்.
குழந்தை உயிரிழந்ததை மறைக்க உடல்நலக்குறைவு காரணமாக குழந்தை உயிரிழந்தது என உடனுக்குடன் உடலை அடக்கமும் செய்துள்ளனர்., இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த மே மாதம் 11 ஆம் தேதி, சேடபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் காவல்துறை உதவியோடு குழந்தையின் உடலை தோண்டி எடுத்து அதே இடத்த உடற்கூறாய்வு செய்தனர்.
இந்த உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையில் சாப்டூர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை படுகொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளர்., இந்த சம்பவம் தொடர்பாக கணவன் மனைவி இருவரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சுருக்கென வார்த்தையை விட்ட சுகராஜ்... கணவனை தோசைக்கல்லால் அடித்து ஜோலியை முடித்த மனைவி...!