காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 36 வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் RN ரவி தலைமையில் நடைபெற உள்ளது. ஆய்வறிஞர்கள் மற்றும் பதக்கம் பெற்றவர்கள்,முதல் தரம் பெற்றவர்கள் என 314 பேர்களுக்கு ஆளுநர் நேரடியாக பட்டங்களை வழங்குகிறார்
இந்த பட்டமளிப்பு விழாவின் மூலம் 43 , 163 பேர் பட்டம் பெறுகின்றனர்.
விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி நாராயணன் பட்டமளிப்பு விழா பேருரையாற்ற உள்ளார்
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை தாமதப்படுத்தும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பிற்கு பிறகு நடக்கும் பட்டமளிப்பு விழா என்பதால் அழைப்பிதழில் அமைச்சர் முன்னிலை வகிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்று நடக்கும் அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என தெரிகிறது.
இதையும் படிங்க: மறைந்தார் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்.. முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவி நேரில் அஞ்சலி..!!
மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் பட்டம் வாங்க மறுத்தமாணவியால் பரபரப்பு ஏற்பட்டு சண்சையான நிலையில், மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் நிகழ்சியில் மாற்றம் கொண்டு வந்து முன்னதாக பட்டங்களை வழங்கி விட்டு புகைப்படம் மட்டுமே எடுத்து கொள்வதை தவிர்த்து பட்டங்களை ஆளுநரே வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: தேநீர் விருந்துக்கு அழைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. புறக்கணித்த தவெக கட்சி..!!