ஓ. பன்னீர்செல்வம் தமிழக அரசியலில் நீண்டகாலமாக அதிமுகவின் முக்கியத் தலைவராக இருந்தவர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஆளாக, மூன்று முறை முதலமைச்சராகப் பதவி வகித்தவர். பெரியகுளத்தில் அதிமுகவின் அடிமட்டத் தொண்டராகத் தொடங்கிய ஓபிஎஸ், படிப்படியாக கட்சியில் உயர்ந்தார்.
பெரியகுளம் நகரச் செயலாளர், தேனி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றினார். 2001ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று, பெரியகுளம் மற்றும் போடிநாயக்கனூர் தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

ஆனால் கட்சியில் ஏற்பட்ட பிளவுகள், எடப்பாடி பழனிசாமியுடனான மோதல்கள் காரணமாக அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு தனியாக அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற அமைப்பை நடத்தி வந்தார். சமீபத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் திடீரென திமுகவில் இணைந்தார். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முன்னிலையில் அவர் கட்சியில் சேர்ந்தார்.
இதையும் படிங்க: சட்டைப்பையில் ஜெயலலிதா படம்... விஜய் சொன்ன அந்த வார்த்தை... மனவேதனையில் செங்கோட்டையன்...!!
இணைந்த பிறகு, அவர் அதிமுக - பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்று திட்டவட்டமாகக் கூறினார். எத்தனை பொதுக்கூட்டங்கள், எத்தனை தலைவர்கள் கலந்துகொண்டாலும், எவ்வளவு பிரமாண்டமான கூட்டங்கள் நடத்தினாலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா முதுகில் குத்திய OPS..! பியூஷ் கோயல் பகிரங்க குற்றச்சாட்டு..!!