அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ செல்வதற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாகர்கோவிலில் ரோட் ஷோ என்று பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார் வெப்பமூடு த் தொடங்கி வடசேரி வரை சுமார் 1.5 km தொலைவிற்கு அவர் ரோட் ஷூ நடத்துகிறார் கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.
அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நடத்தும் இந்த ரோடு ஷோவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் இணைந்து பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமரின் இந்த வருகை என்.டி.ஏ. கூட்டணிக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போட்டியிடும் என்.டி.ஏ. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் பேசியதாகவும், அவர்களின் வெற்றிக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த ரோடு ஷோ அமைந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டை கொண்டாடிய பிரதமர் மோடி..! துணை ஜனாதிபதி இல்லத்தில் வழிபாடு..!!
தமிழ்நாட்டில் அதிமுகவுடன் என்.டி.ஏ. கூட்டணி உருவான பின்னர், பிரதமர் மோடியின் இந்த வருகை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு அதிமுக மீண்டும் என்.டி.ஏ.வில் இணைந்தது முதல், இரு கட்சிகளும் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரதமரின் ரோடு ஷோ, தென் தமிழ்நாட்டில் என்.டி.ஏ.வின் செல்வாக்கை அதிகரிக்கும் என்று கூட்டணித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டு: முதல் ஆளாக தமிழில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி... இபிஎஸும் வாழ்த்து சொல்லிட்டாரு...!